»   »  'அப்படி' சொல்லிடுவாங்களோன்னு தான் வாய் திறக்கல: ஓவியா பற்றி விஷ்ணு விஷால் பேட்டி

'அப்படி' சொல்லிடுவாங்களோன்னு தான் வாய் திறக்கல: ஓவியா பற்றி விஷ்ணு விஷால் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி தங்கம் படத்தில் ஓவியா குத்தாட்டம் போடுகிறார்.

விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா கசான்ட்ரா நடிக்கிறார்.

திருவிழாவில் குத்தாட்டம் போடுகிறார் பிக் பாஸ் புகழ் ஓவியா. மேலும் மூன்று முக்கிய காட்சிகளில் வருகிறாராம் ஓவியா.

விஷ்ணு

விஷ்ணு

விஷ்ணு விஷாலுக்கு ஓவியாவை நீண்ட காலமாக நன்கு தெரியும். அதனால் ஓவியாவின் பெயரை இயக்குனரிடம் பரிந்துரை செய்ததே விஷ்ணு விஷால் தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஓவியா

ஓவியா

என் படத்தில் நடிக்க அழைத்ததும் ஓவியா உடனே சம்மதம் தெரிவித்தார். எங்கள் பட செட்டில் இருந்தபோது தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்றார் விஷ்ணு.

நடிப்பு

நடிப்பு

ஓவியா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடிக்கவில்லை. இந்த படம் மூலம் அவர் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என்று விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

பப்ளிசிட்டி

பப்ளிசிட்டி

நாங்கள் பப்ளிசிட்டிக்காக இதை செய்வதாக நினைத்துக் கொள்வார்கள் என்று நான் இதை இதுவரை யாரிடமும் தெரிவிக்கவில்லை. எங்கள் படத்தில் ஓவியா இருப்பது மகிழ்ச்சி. அவர் அருமையான பெண் என்றார் விஷ்ணு.

English summary
Big Boss fame Oviya will be seen doing an item number in Vishnu Vishal's upcoming movie Silukkuvarpatti Singam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil