»   »  ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா #OviyaArmy

ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா #OviyaArmy

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஓவியா தனது ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். ட்விட்டரில் ஓவியா ஆர்மி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஓவியா தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு ரசிகரின் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

 இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

ஓவியா தனது ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வீட்டு குழந்தையை தூக்கி அவர் கொஞ்சும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிம்பிள்

பந்தாவே இல்லாமல் ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஓவியா. இதனால் தான் தாங்க அவர் எங்களின் தலைவி என்கிறார்கள் ஓவியா ஆர்மிக்காரர்கள்.

அழகிய ஓவியா

இந்த பொங்கல் ஓவியா ஆர்மிக்கு ஓவியா பொங்கல் ஆகும். நாளை காலை 9 மணிக்கு விஜய் டிவியில் அழகிய ஓவியா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

மாற்றுத் திறனாளிகள்

அழகிய ஓவியா நிகழ்ச்சியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் பொங்கல் கொண்டாடுகிறார் ஓவியா. நிகழ்ச்சியை காணத் தவறாதீர்கள் என்று ஓவியா ஆர்மி ட்வீட்டி வருகிறது.

English summary
Actress Oviya has visited a fan's house and gave a sweet surprise to the entire family. Pictures of her with that family is doing rounds on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X