twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒவ்வொரு நாளும்...வைரமுத்துவின் நாட்படுதேறல் 2 அடுத்த பாடல் வெளியீடு

    |

    சென்னை : கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறலில் இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு நாளும் என்ற தலைப்பில் அடுத்த பாடல் ஜுன் 12 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த வித்தியாசமான பாடல் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

     Ovoru Naalum...9th song of Naatpadu theral part 2 will released June 12th

    தமிழ் சினிமாவில் 7500 பாடல்கள் எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து, தனது புதிய முயற்சியாக நாட்படு தேறல் என்ற தலைப்பில் பாடல்கள் எழுதி வருகிறார். தனது வரிகளில் 100 பாடல், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 டைரக்டர்கள் என நாட்படுதேறல் பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதன் முதல் பாகம் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் தற்போது நாட்படு தேறலின் இரண்டாம் பாகம் வெளியாகி வருகிறது. இதில் 8 பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், ஒன்பதாவது பாடல் ஒவ்வொரு நாளும் என்ற தலைப்பில் ஜுன் 12 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இசையருவி சேனலில் பகல் 1.30 மணிக்கும், கலைஞர் டிவியில் மாலை 5.30 மணிக்கும் இந்த பாடல் வெளியிடப்பட உள்ளது. இந்த பாடலின் வரிகளை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

     Ovoru Naalum...9th song of Naatpadu theral part 2 will released June 12th

    ஒவ்வொரு நாளும் உலகு திறக்கும்
    உதயக் கதிரே வணக்கம்
    கதிரைக் கண்டு கதவு திறக்கும்
    காலை மலர்காள் வணக்கம்

    இங்கோ எங்கோ பொழிப் போகும்
    ஈர மழையே வணக்கம்
    தங்க மணியோ கனியோ வளர்க்கும்
    தாவரக் குழுவே வணக்கம்

    எங்கள் வீட்டில் வாசல் தெளித்த
    இரவுப் பனியே வணக்கம்
    எங்களை விடவும் நன்றாய்ப் பாடும்
    இன்னிசைக் குயில்காள் வணக்கம்

    பறந்து கொண்டே காடு வளர்க்கும்
    பறவை இனங்காள் வணக்கம்
    நடந்து கொண்டே தாகம் தீர்க்கும்
    தண்ணீர் நதிகாள் வணக்கம்

    கோடி யுகங்கள் துய்த்த பின்னும்
    குறையாக் காற்றே வணக்கம்
    புதிய உலகைப் படைக்கத் தூண்டும்
    பழைய நெருப்பே வணக்கம்

    தொன்மைப் பொருளே வணக்கம்-நாளை
    தோன்றும் பொருளே வணக்கம்
    பிறந்த உயிரே வணக்கம் - இன்று
    நிறைந்த உயிரே வணக்கம்

    இதயப் போரை முடித்து வைக்கும்
    இரவுத் துயிலே வணக்கம்

    வேறோர் உயிரின் பசியைப் போக்கும்
    வேர்வைத் துளியே வணக்கம்
    காயம் மீது மருந்தாய் வீழும்
    கண்ணீர்த் துளியே வணக்கம்

    ஐம் பூதத்தின் தூய்மை காக்கும்
    அத்துணை உயிர்க்கும் வணக்கம்
    அடுத்த கோளில் மனிதரை ஏற்றும்
    அறிவுத் திறமே வணக்கம்

    கலையாக் கலையே வணக்கம் - நல்ல
    கதைப் பொருளே வறக்கம்
    சமத்துவ மண்ணே வணக்கம் - உலக
    சமதானமே வணக்கம்

    வாழும் உலகை இயங்கச் செய்யும்
    வழிற்றுப் பசியே வணக்கம்

    டைரக்டர் தளபதி பிரபு இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரிஹரன் மற்றும் ஹரிணி ஆகியோரின் குரலில் உருவாகி இருக்கும் இந்த பாடலின் வீடியோ வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட உள்ளது.

    முன்னதாக கவிஞர் வைரமுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிகழ்த்திய கலைஞர் 99 கவியரங்கத்தில் வாழ்த்துரை வழங்கினார். முன்னோர் மூட்டிவைத்த நூற்றாண்டு நெருப்பு அணையாமல் காப்பது அனைவரின் பொறுப்பு என தனது உரையில் குறிப்பிட்டார். இந்த விழாவில் கவிஞர்கள் பா.விஜய், சொற்கோ கருணாநிதி, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், பழ.புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போட்டோவையும் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

    English summary
    Kavingar Vairamuthu's 9th song of Naatpadu Theral part 2 will released on June 12th. This song is about welcoming note for everyday morning. This Ovoru Naalum song was directed by Thalapathy Prabhu. Music composed by G.V.Prakash Kumar and sung by Hariharan and Harini.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X