»   »  இதயங்களைத் தாலாட்டும் மெல்லிசை ராணி.. பி.சுசீலாவின் 10 முத்திரைப் பாடல்கள்!

இதயங்களைத் தாலாட்டும் மெல்லிசை ராணி.. பி.சுசீலாவின் 10 முத்திரைப் பாடல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று 17,695 சோலோ பாடல்கள் பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பின்னணி பாடகி பி சுசீலா அவர்கள் பாடிய ஒவ்வொரு பாடல்களும் ரசிக்கக்கூடியவையே.

தேனில் எந்தத் துளி தித்திப்பு என்றால் என்ன பதில் சொல்ல முடியும்.. அந்த வகையில் சுசீலாவின் அத்தனை பாடல்களும் தேன் துளிகள்தான்.

இருப்பினும் நம் தமிழ் மொழியில் அவர் பாடிய பல சிறந்த பாடல்களிருந்து 10 சிறந்த பாடல்களை தேர்வுசெய்து, பி.சுசீலாவைப் பெருமைப்படுத்தும் விதமாக, சமர்ப்பிக்கின்றோம்.

கற்பூர பொம்மை:

கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். இந்த படத்தில், பி சுசீலா அவர்கள் பாடல் மட்டுமில்லை, எஸ் பி பி தன் மூச்சினை அடக்கிக்கொண்டு பாடி விருதினை பெற்ற பாடலும் இந்த படத்தில்தான் உள்ளது.

மெல்லிசை நிலா

உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் இடம்பெற்ற பாடல். இந்த பாடலே பி சுசீலாவிற்கு மெல்லிசை ராணி என்ற பட்டத்தை பெற்றுத்தந்தது.

அத்தை மடி மெத்தையடி

வாலியின் வரிகளில் இன்றும் தாலாட்டாக சுசீலாவின் குரலில் இசைக்கும் ஓர் அருமையான பாடல். அத்தை மடி....

நலம் தானா

நாட்டிய பேரொளி பத்மினி என்ற பெயர் பெற்றதுக்கு சுசீலாவும் ஒரு காரணம். பத்மினியின் உடலாகிய நடனத்திற்கு இவரின் நலம் தானா என்ற பாடலே உயிர் கொடுத்தது.

லாலி லாலி

இந்த பாடல் சிற்பிக்குள் முத்து என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலாகும்.

என்ன என்ன வார்த்தைகளோ

வெண்ணிற ஆடை திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். என்ன என்ன வார்த்தைகளோ இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கின்றோம், புகழ..

மாலைப்பொழுதின் மயக்கத்திலே

எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பி சுசீலா பாடிய பாடல்களில் இந்த பாடலுக்கு ஈடுஇணை இன்றுவரை ஏதுமில்லை.

சொன்னது நீதானா

இந்த பாடல் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. மனைவியின் காதலையும், கணவனின் துடிப்பையும் அழகாக பாடலிலே நாம் உணரலாம்.

நினைக்க தெரிந்த மனமே

விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் கூட்டணியில் உருவான பாடல்.

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

இந்த பாடல் இடம் பெற்ற படம் பாகபிரிவினை. இது பாடல் மட்டுமில்லை. மனதால் சோர்ந்து போனவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு உற்சாகபானம் என்றே கூறலாம்.

English summary
Here The List Of The Melody Queen P.Suseela's 10 Superb Songs..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil