For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பி.சுசீலாவின் உருவம் பொறித்த தபால் தலை... அஞ்சல் துறை பற்றி என்ன சொன்னார் சுசிலா தெரியுமா?

  |

  சென்னை : மிகவும் பாரம்பரியமான நம் பழக்கங்களில் ஒன்று தபால்கள் படிப்பதும் மற்றவர்களுக்கு அனுப்புவதும்.

  லேண்ட்லைன் போன், செல் போன்,இ.மெயில் போன்ற பல விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக தபால்களின் முக்கியத்துவம் குறைந்து உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

  ஆனால் இன்று வரை வயதில் பெரியவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் பழைய தபால்கள்களை பொக்கிஷமாக பாதுகாத்து இன்றைய தலைமுறைக்கு அதை பற்றிய சிறப்பு ரீவைண்டு கதைகளை சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள் .

  மிக பெரிய மரியாதை, கௌரவம்

  மிக பெரிய மரியாதை, கௌரவம்

  பிரபலமான சாதனையாளர்கள் பெயரும் உருவமும் தபாலில் இடம் பிடித்திருக்கிறது. அவர்கள் செய்த சாதனை,மக்கள் கொடுத்த அங்கிகாரம் போன்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு அரசாங்கம் செய்யும் ஒரு மிக பெரிய மரியாதை, கௌரவம் தான் தபால் தலைகளில் அவர்களின் முகம் மற்றும் பெயர்களை குறிப்பிடுவது. போஸ்ட் கார்டு, ஸ்டாம்ப் போன்ற பல இடங்களில் அவர்கள் முகம் இடம் பெரும். பிரபலமான சாதனையாளர்களுக்கு மட்டும் தான் அரசாங்கமே இந்த மரியாதை, கௌரவம் கொடுக்கிறது. இதற்கு அப்பாற்பட்டு சாமானியர்களுக்கு கூட இந்த ஆசை இருப்பதை அஞ்சல் துறை புரிந்து கொண்டு பல குட்டி குழந்தைகளின் புகைப்படங்களை அந்த குடும்பத்தை மகிழ்விக்க குறிப்பிட்ட ஒரு தொகைக்கு வாங்கி கொண்டு குறைந்தபட்சம் 20 முதல் 25 ஸ்டாம்ப்ஸ் கொடுக்கப்படுகிறது.

  கலைத்துறைச் சேவைக்காக ...

  கலைத்துறைச் சேவைக்காக ...

  இப்படிப்பட்ட சூழ்நிலையில் பி.சுசீலாவின் உருவம் பொறித்த தபால் தலை சமீபத்தில் வெளிவந்து உள்ளது. இனிமையான குரல் யார் என்றால்?' பி.சுசீலாவின் குரலே போட்டியின்றித் தேர்வாகும் காலம் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே .அந்த கால சினிமா பாடல்கள் என்று வரும் போது ரசிகர்களின் செவிகளையும் மனதையும் வருடிய இவரின் பாடல்கள், இன்றும் அதே இனிமையுடன் ஒலிக்கின்றன. வித்யாசமான சினிமா பாடல்கள் மூலம் மிக பெரிய ஆளுமையாகப் பல பெருமைகளைப் பெற்ற சுசீலாவுக்கு, மற்றுமொரு புகழைச் சேர்த்திருக்கிறது இந்தியத் தபால்துறை. கலைத்துறைச் சேவைக்காக, சுசீலாவின் உருவம் பொறித்த தபால் தலையுடன் கூடிய சிறப்பு போஸ்டல் கவரை வெளியிட்டிருக்கிறது அஞ்சல் துறை. இதுகுறித்து சுசீலாவிடம் பல தனியார் ஊடகங்கள் பேட்டி எடுத்து உள்ளனர்.

  ஆல் இந்தியா ரேடியோ

  ஆல் இந்தியா ரேடியோ

  இந்த மரியாதையை குறித்து,அஞ்சல் துறை பற்றி பி.சுசீலா பேசியது என்னவென்றால் "அந்தக் காலத்துல, ரசிகர்களிடம் இருந்து எனக்கு நிறைய தபால்கள் வரும். அதை மிகவும் ஆர்வமா படிச்சுப் பார்த்து, பதில் கடிதம் அனுப்புறதுல கிடைக்கிற மகிழ்ச்சி இருக்கே அவ்வளவு சந்தோஷத்தை தரும் , வார்த்தைகளால் விவரிக்க முடியாத பரவசம் அது. என் பெயரும் உருவமும் தபாலில் இடம் பிடிச்சிருக்கிறது அளவுகடந்த பெருமையா, சந்தோஷமா இருக்கு.என் சிறு வயது காலத்துல டெலிபோன் வசதியெல்லாம் ரொம்பவே கம்மியாத்தான் இருந்துச்சு. அவசரமா யார்கிட்டயாவது பேசணும்னா, தபால் ஆபீஸுக்குப் போய்தான் பேச முடியும். தபால் மூலமாதான் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் . இதேபோல, ஆல் இந்தியா ரேடியோவுல ஒலிபரப்பாகிற செய்திகளைக் கேட்க ஆவலுடன் காத்துக்கிட்டிருந்த காலமெல்லாம் மிகவும் பொக்கிஷமானது ,பசுமையானது. இந்த உலக செய்திகளையும் நிகழ்வுகளையும் தெரிஞ்சுக்க உதவிய இந்த ரெண்டு துறைகளும் எங்க வாழ்க்கையில ரொம்பவே முக்கியமானவை. முதன்மையானவை என்று மிகவும் பெருமையாக சொல்லி உள்ளார் பி.சுசிலா.

  பழம்பெரும் பாடகி

  பழம்பெரும் பாடகி

  சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், என்று பல துறை சார்ந்த பல விதமான பிரபலங்களை அஞ்சல்துறை பெருமைப்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட சாதனையாளர்களை தொடர்ந்து பெருமைப்படுத்தும், கவுரவப்படுத்தும் அஞ்சல் துறை, பல காலமாக நடந்து வரும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பழம்பெரும் பாடகி பி சுசிலா அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு கவுரவம் கிடைத்தது தமிழர்களுக்கும் தமிழ் திறமைக்கும் கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும்.

  English summary
  P Sushila Photo in Indian Stamp Post, and What she says about Postal Department?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X