»   »  பி வாசு படத்தில் ரஜினி நடிக்கவில்லை... ராகவா லாரன்ஸ்தான் நடிக்கிறார்!

பி வாசு படத்தில் ரஜினி நடிக்கவில்லை... ராகவா லாரன்ஸ்தான் நடிக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல இயக்குநர் பி வாசு அடுத்து இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பார் என்று வந்த தகவல்களில் உண்மை இல்லை. அந்தப் படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் பி.வாசு இயக்கிய கன்னடப்படம் சிவலிங்கா. அண்மையில் வெளியான இந்தப்படம் சந்திரமுகியின் இரண்டாம் பாகம் எனும் அளவுக்கு இருந்ததாகக் கூறினர்.

P Vasu to direct Raghava Lawrance

இப்படத்தைத் தமிழில் எடுக்கத் திட்டமிட்ட வாசு, சில தினங்களுக்கு முன் படத்தை ரஜினிக்கு போட்டுக் காட்டினார்.

இதைத் தொடர்ந்து அந்தப் படத்தில் ரஜினி நடிப்பார் என்று வதந்திகள் உலா வந்தன.

ஆனால் படத்தில் ரஜினி நடிக்கவில்லை. அதுபற்றி அவர் வாசுவிடம் எதுவும் பேசவும் இல்லை என்று இப்போது தெரிய வந்துள்ளது.

அந்தப் படத்தில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க வாசு முயற்சித்து, அதில் வெற்றியும் கண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

லாரன்ஸ் மட்டுமின்றி கதைப்படி இன்னொரு ஹீரோவாக இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தியையே நடிக்க வைக்கப் போகிறாராம் (எப்படியோ... இந்தப் படமாவது சக்திக்கு கைகொடுக்கிறதா.. பார்க்கலாம்)

English summary
Latest Kollywood reports suggest that P Vasu has approached Raghava Lawrance and got his acceptance for his next movie, the remake of Sivalinga.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil