»   »  ஒரு கொலை.. சாட்சி சொல்லும் புறா... இதுதான் பி வாசுவின் சிவலிங்கா!

ஒரு கொலை.. சாட்சி சொல்லும் புறா... இதுதான் பி வாசுவின் சிவலிங்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னடத்தில் பெரும் ஹிட்டடித்த சிவலிங்கா படம் அதே பெயரில் தமிழில் ரீமேக் ஆகியிருக்கிறது. தமிழில் ஹீரோ ராகவா லாரன்ஸ்... இயக்குநர் அதே பி வாசு.

ராகவா லாரன்ஸ் ஜோடியாக ரித்திகா சிங் நடித்திருக்கிறார். வடிவேலுவுக்கு மிக முக்கியமான வேடம். சந்திரமுகியில் வந்ததை விட பவர்ஃபுல் ரோல் என்கிறார் இயக்குநர் வாசு.

இந்த மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கும் சிவலிங்கா குறித்து இயக்குநர் பி வாசு செய்தியாளர்களிடம் கூறுகையில், "கன்னடத்தில் கடந்த ஆண்டின் சென்சேஷனல் ஹிட் சிவலிங்கா. 85 அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம்.

அந்தப் படத்தை அதே பெயரில் இப்போது தமிழில் எடுத்துள்ளேன்.

கதை இதுதான்

கதை இதுதான்

என் படங்களில் கதைதான் ஹீரோ. இந்தப் படத்தின் கதை இதுதான்..

ஒரு பையன் ரெயிலில் சென்றுகொண்டிருக்கிறான். அவன் தான் வளர்க்கும் புறாவையும் உடன் கொண்டு செல்கிறான். அந்தப் பெட்டியில் யாரும் இல்லை. ஏன்னா அது கடைசி ரயில். எனவே, அவன் தூங்கலாம் என படுக்கிறான். அப்போது அந்த கம்பார்ட்மென்டில் இருந்து கண்தெரியாத ஒருவன் எழுந்து நடந்து வாசல் பக்கம் செல்கிறான்.

உடனே புறா அந்தப் பையனை எழுப்புகிறது. அவன் எழுந்து குருடனை காப்பாற்ற முயற்சிக்கிறான். ஆனால், அவனோ திடீரென காப்பாற்ற வந்த பையனை கீழே தள்ளி கொல்கிறான். அவனது ரத்தம் புறாவின் மீது விழுகிறது. இப்போது அந்த புறாதான் கொலைக்கு சாட்சி. அந்த புறா, இந்த கொலையை செய்தது யார் என்பது குறித்து கதாநாயகனிடம் சொல்வதுதான் கதை. புறா எப்படி சொல்கிறது? என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

சிபிசிஐடி அதிகாரி

சிபிசிஐடி அதிகாரி

இது தற்கொலை என்று கோர்ட் முடிவு செய்கிறது. ஆனால், அவனது காதலி இந்த வழக்கை மறுபடியும் விசாரிக்க முறையிடுகிறார். எனவே, மிகவும் ரகசியமாக சிபிசிஐடி மூலம் விசாரிக்கிறார்கள். லாரன்ஸ் இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிபிசிஐடி அதிகாரியாக வருகிறார். அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.

வடிவேலு

வடிவேலு

சந்திரமுகிக்குப் பிறகு வடிவேலுவுக்கு இதில் பெரிய கேரக்டர். அந்த அளவுக்கு நன்றாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிபிசிஐடியிடம் மாட்டிக்கொண்ட திருடன் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தின் கிளைமாக்சும் வித்தியாசமாக இருக்கும்.

தமிழ் - தெலுங்கில்

தமிழ் - தெலுங்கில்

சந்திரமுகி போன்று சிவலிங்காவும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெளியாகிறது. இப்படத்தை உலகம் முழுவதும் திரையிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப ‘சப்-டைட்டில்' கொடுக்க உள்ளோம். அதற்காகவே கூடுதல் 30 நாட்கள் அவகாசம் எடுத்துள்ளோம். ஜனவரி 26-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.

லாரன்சின் தாயாராக ஊர்வசி, கதாநாயகியின் தாயாராக பானுப்பிரியா நடித்துள்ளனர்," என்றார்.

English summary
Director P Vasu has met the media and briefed about his forthcoming movie Sivalinga.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil