twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிலமே எங்கள் உரிமை.. அசுரன்களை திரையில் கொண்டாடிய வெற்றிமாறன்.. பாராட்டிய ப. ரஞ்சித்!

    |

    Recommended Video

    ASURAN FDFS PUBLIC REVIEW | DHANUSH | VETRIMARAN | FILMIBEAT TAMIL

    சென்னை: அசுரன்களை திரையில் காட்டிய வெற்றிமாறனுக்கு மிக்க நன்றி என்று இயக்குனர் ப. ரஞ்சித் டிவிட் செய்துள்ளார்.

    பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் அசுரன் . இந்த நாவலின் கதையில் சில மாற்றங்களை செய்து, வெற்றிமாறன் இதை திரைக்கு கொண்டு வந்து இருக்கிறார்.

    இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நெட்டிசன்கள் பலர் படத்தை பாராட்டி வருகிறார்கள். படம் தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

    பிறந்தது லண்டன்... தமிழ்தான் உயிர்.. - அசுரன் டீஜே அருணாசலம் பேட்டிபிறந்தது லண்டன்... தமிழ்தான் உயிர்.. - அசுரன் டீஜே அருணாசலம் பேட்டி

    படம் எப்படி

    படம் எப்படி

    இந்த படம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக மிக கடுமையான வாதங்களை வைத்தது. முக்கியமாக பஞ்சமி நிலங்கள் எப்படி அபகரிக்கப்பட்டது. எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டது என்று கடுமையாக இந்த படத்தில் பேசப்பட்டது.

    காட்சிகள்

    காட்சிகள்

    முக்கியமாக தனுஷின் பிளாஷ்பேக் காட்சிகளில் நிலமே எங்கள் உரிமை என்று கூறி மக்கள் போராடும் நிலை கூட ஏற்பட்டது. தமிழில் ப.ரஞ்சித்தை தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரும் ஜாதி ஒடுக்குமுறைகள் குறித்து படம் எடுக்க தொடங்கி உள்ளனர்.

    ரஞ்சித் பாராட்டு

    இந்த நிலையில் ப. ரஞ்சித் இந்த படத்தை பார்த்துவிட்டு வெற்றிமாறனை பாராட்டி இருக்கிறார். அதில், தமிழ்த்திரையில் #அசுரன்' கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன், தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் தனுஷ், நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தாணு ஆகியோருக்கு வாழ்த்துகள்.

    என்ன மகிழ்ச்சி

    என்ன மகிழ்ச்சி

    அதேபோல் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!!, என்று ப. ரஞ்சித் டிவிட் செய்துள்ளார். இது மட்டுமின்றி படக்குழுவிற்கு போன் செய்து மொத்தமாக பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Pa.Ranjith gives thumps up to Vetrimaran and Asuran movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X