சூர்யாவை வைத்து மாஸ்டர் ப்ளான் போடும் பா. ரஞ்சித்: கண்டிப்பா ஹாலிவுட் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கலாம்

சென்னை: பா. ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Recommended Video

Kalidas Jayaram | இந்த படத்துல நடிக்கல, வாழ்ந்து இருக்கேன்.. காளிதாஸ் உருக்கம்| *Launch

இதனைத் தொடர்ந்து விக்ரமுடன் கூட்டணி வைத்துள்ள ரஞ்சித், 'சியான் 61' படத்தை இயக்குகிறார்.

சூர்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ள பா. ரஞ்சித், அந்த படம் குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார்.

புதிய களத்தில் நட்சத்திரம் நகர்கிறது

புதிய களத்தில் நட்சத்திரம் நகர்கிறது

அட்டக்கத்தி முதல் சார்பட்டா பரம்பரை வரை தான் இயக்கிய 5 படங்களிலும் வெரைட்டி காட்டிய ரஞ்சித், தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கியுள்ளார். கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், வரும் 31ம் தேதி வெளியாகிறது. காதல் படமாக இல்லாமல், காதலைப் பற்றியும் ஒருபாலின ஈர்ப்பாளர்கள் குறித்தும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் பேசியிருப்பதாக பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

விரைவில் சியான் 61

விரைவில் சியான் 61

புதுமையான கதைக்களம், வித்தியாசமான மேக்கிங் போன்றவைகளால் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 'சியான் 61' படத்தை இயக்குகிறார் ரஞ்சித். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படம், புதிய பரிமாணத்தில் இருக்கும் என ரஞ்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால், இப்போது விக்ரம் - ரஞ்சித் இணையும் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கமலுடன் இணையும் ரஞ்சித்?

கமலுடன் இணையும் ரஞ்சித்?

முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஞ்சித்தும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "விரைவில் கமல் சாருடன் ஒரு படம் பண்ண வேண்டும். மதுரையை பின்னணியாக வைத்து கமல் சாருக்காக ஒரு கதை ரெடியாக உள்ளது" என தெரிவித்திருந்தார். கமல்ஹாசனும் அதே மேடையில் ஏறி சீக்கிரமே அந்த படம் பண்ணலாம் என ரஞ்சித்துக்கு நம்பிக்கை தெரிவித்தார். இதனால் விக்ரம் நடிக்கும் படத்தை தொடர்ந்து கமலுடன் பா. ரஞ்சித் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவுடன் கனவுப் படம்

சூர்யாவுடன் கனவுப் படம்

இதனிடையே, 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பா ரஞ்சித், விரைவில் சூர்யாவுடன் ஒரு படம் பண்ணவுள்ளதாகக் கூறியுள்ளார். அதுவும் தனது கனவுப் படமான ஜெர்மன்' என்றும் ரஞ்சித் தெரிவித்துள்ளார். "மேட் மேக்ஸ் சூரி, பிளேட் ரன்னர் ஆகிய படங்கள். சோசியல் பாலிடிக்ஸ் பற்றி பேசியிருந்தது. அதேபோல், எனது கனவுப் படமான 'ஜெர்மன்' இமேஜினரியுடன் பேன்டஸியாக இருக்கும். இதற்காக ஜெர்மன் சென்று ஷூட்டிங் நடத்தவுள்ளேன். நிச்சயம் விஎஃப்எக்ஸ் டெக்னாலஜியில் இருக்கும்" எனவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X