Don't Miss!
- News
கருணாநிதி பேனா.. எதற்கு பதறுகிறீர்கள்? அலைகளில் முடிவுற்ற சொற்களை எழுதும் என்றா? மனுஷ்ய புத்திரன்
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Sports
விளையாடுவதற்கு முன்பே இந்தியா மீது ஸ்மித் புகார்.. பயற்சி ஆட்டத்திற்கு நோ சொன்ன பின்னணி.. சரி வருமா
- Finance
அதானியின் ஒற்றை முடிவு.. 22% சரிவினைக் கண்ட அதானி எண்டர்பிரைசஸ்.. மற்ற பங்குகள் நிலை?
- Lifestyle
தொண்டை வலி அதிகமா இருக்கா? இருமல் தொடர்ந்து வருதா? அப்ப இந்த பொருட்கள் கலந்த நீரை குடிங்க போதும்!
- Technology
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது ட்ரெய்லர் அப்டேட்: போஸ்டர்லயே செம்மையான டீட்டெய்ல் இருக்குதே
சென்னை: கோலிவுட்டின் திறமையான இயக்குநர்களின் பட்டியலில் பா' ரஞ்சித்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு.
அட்டகத்தி படத்தில் தொடங்கிய ரஞ்சித்தின் பயணம் பத்தாண்டுகளில் பிரமாண்டமாக உருவெடுத்துள்ளது.
தற்போது அவர் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது' படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அட்டக் கத்தி முதல் சார்பட்டா பரம்பரை வரை… 10 ஆண்டுகளில் இயக்குநர் பா. ரஞ்சித் நிகழ்த்திய ராஜபாட்டை

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம்
2012ல் அட்டக்கத்தி படம் வெளியான போது ரஞ்சித் குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் 'அட்டக்கத்தி' படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம், ரஞ்சித்துக்கு வேறலெவலில் ரீச் கொடுத்தது. கார்த்தி, கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். அரசியலை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்தது.

ரஜினியுடன் கபாலி, காலா
முதல் இரண்டு படங்களிலேயே பலரது கவனத்தையும் ஈர்த்த ரஞ்சித், மூன்றாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்தார். மொத்த திரையுலகமும் இந்தக் கூட்டணியை உற்றுநோக்கியது. ஆனால், 'கபாலி' படம் வெளியான பிறகு, ரஞ்சித் மீதான பார்வை இன்னும் உச்சம் தொட்டது. அடுத்தும் அவர் ரஜினியை வைத்து இயக்கிய 'காலா' திரைப்படம், புதி அதிர்வுகளை ஏற்படுத்தியது. இரண்டு படங்களிலும் ரஞ்சித் தான் பேச நினைத்த அரசியலை துணிச்சலாக பேசியிருந்தார்.

சம்பவம் செய்த சார்பட்டா பரம்பரை
ரஞ்சித் இயக்கிய முதல் 4 படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஆர்யா நடிப்பில் அவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை, இன்னொரு மாஸ்டர் பீஸாக அமைந்தது. 1980களில் சென்னையின் அடையாளமாக இருந்த குத்துச் சண்டையை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்த, இப்படத்திற்கு தாறுமாறான வரவேற்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் 'சார்பட்டா பரம்பரை' படத்துடன், ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணியும் முடிவுக்கு வந்தது.

நட்சத்திரம் நகர்கிறது
'சார்பட்டா பரம்பரை' படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'நட்சத்திரம் நகர்கிறது' வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என, ரஞ்சித் அறிவித்துள்ளார். இதற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில், நடிகர், நடிகை புகைப்படங்கள் இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. ஏற்கனவே இந்தப் படம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த படம் என சொல்லப்படும் நிலையில், தற்போது வெளியான போஸ்டரும் அதை உறுதிப்படுத்தும் விதமாக காணப்படுகிறது.