»   »  ரஜினியின் 'கபாலி'க்காக சூர்யாவை காத்திருக்க வைத்த ரஞ்சித்!

ரஜினியின் 'கபாலி'க்காக சூர்யாவை காத்திருக்க வைத்த ரஞ்சித்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியைத் தொடர்ந்து சூர்யாவை இயக்கப் போவதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.

அட்டக் கத்தி, மெட்ராஸ் படத்தின் மூலம் 3 வது படத்திலேயே ரஜினியை இயக்கும் அளவுக்கு ரஞ்சித் வளர்ந்து விட்டார். கபாலி டீசர், பாடல்கள் ஹிட்டடித்த நிலையில் படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-statement-about-jayalalaitha-s-assets-case-256946.html

இந்நிலையில் ரஜினிக்குப் பின் அடுத்ததாக ரஞ்சித் இயக்கப் போவது யார்? என்ற கேள்விகளுக்கு தற்போது அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

கபாலி படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டில் அடுத்து சூர்யாவை இயக்கப் போகும் தகவலை ரஞ்சித் பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து மேலும் விசாரித்ததில் மெட்ராஸ் படத்துக்குப் பின் சூர்யாவைத் தான் ரஞ்சித் இயக்குவதாக இருந்தது. ஆனால் ரஜினி பட அழைப்பு வந்ததால் சூர்யாவிடம் அனுமதி பெற்று கபாலி இயக்கப் போய்விட்டார்.

தற்போது இப்படத்திற்கான கதை, திரைக்கதை ஆகியவற்றை தயார் செய்து விட்டார். சூர்யாவின் எஸ் 3 படப்பிடிப்பு முடிந்தவுடன் இப்படம் தொடங்கும் என்று தெரிவித்தனர்.

வழக்கம்போல இப்படத்தையும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
After Kabali Pa.Ranjith Team up with Surya for His Next Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil