Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ரெஸ்ட் மோடுக்கு வந்த ஆதித்த கரிகாலன்… சீயான் 61 படப்பிடிப்புக்கு நாள் குறித்த விக்ரம்
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரமின் நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் படம் வெளியானதைத் தொடர்ந்து விக்ரம் தனது 61வது படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிட்டார்.
பொன்னியின்
செல்வன்
படத்துக்கு
கிளம்பிய
எதிர்ப்பு..
ராஜமெளலி
படங்களுக்கு
இனி
இங்கே
ஆதரவு
கிடைக்குமா?

பாஸ் மார்க் வாங்கிய விக்ரம்
தமிழ் சினிமாவில் கமலுக்குப் பிறகு வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது நடிகர் விக்ரம் தான். மனுசன் எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் அதற்காக உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்து மாஸ் காட்டுவார். ஆனாலும், விக்ரமின் இந்த அயராத உழைப்பு பல இடங்களில் கை கொடுத்ததில்லை. ஐ, கோப்ரா போன்ற படங்களில் விக்ரமின் நடிப்பு கொண்டாடப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் கோட்டை விட்டன. இந்நிலையில், பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக நடித்து நூத்துக்கு நூறு மார்க் வாங்கியுள்ளார் விக்ரம்.

ரசிகர்கள் பாராட்டு
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுவிட்டது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரமின் நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியான கோப்ரா படம் விக்ரமுக்கு பெரிய சக்சஸ் கொடுக்காத நிலையில், பொன்னியின் செல்வன் அதை சமன் செய்துவிட்டது.

சீயான் 61 ரெடியாகும் விக்ரம்
கடந்த இரண்டு மாதங்களாக கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தார் விக்ரம். ஊர் ஊராக சுற்றிய விக்ரம் இப்போது பொன்னியின் செல்வன் ரிலீஸுக்குப் பின்னர் ரெஸ்ட் மோடில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விக்ரம் தனது 61வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விக்ரமின் 'சீயான் 61' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகிவிட்டது.

ஷூட்டிங் தேதி இதுதானா?
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள 'சீயான் 61' படத்தை பா ரஞ்சித் இயக்குகிறார். சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள ரஞ்சித், முதன்முறையாக விக்ரமுடன் கூட்டணி வைத்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படம் ஸ்போர்ஸ் ஜானரில் ஆக்சன் திரில்லராக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, 'சீயான் 61' படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 10ம் தேதி பூஜையுடன் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விக்ரம் ரசிகர்கள் இன்னும் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் இதுகுறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.