Don't Miss!
- News
எம்.எல்.ஏ, அமைச்சரை எல்லாம் விடுங்க.. நான் உங்க வீட்டு செல்லப் பிள்ளை.. உங்க சகோதரன்: உதயநிதி பேச்சு
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள குதிரைவால் படம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை : இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் குதிரைவால்.
கலையரசன், அஞ்சலி பாட்டில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர்
படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அட
இது
கூட
நல்லா
இருக்கே...மாரி
செல்வராஜிற்கு
ரசிகர்கள்
கொடுத்த
செம
ஐடியா

குதிரைவால் படம்
நடிகர் கலையரசன், அஞ்சலி பாட்டில் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் குதிரைவால். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

பா ரஞ்சித் தயாரிப்பு
பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டு வருகிறது. பரியேறும் பெருமாள், மூன்றாம் உலகப்போரின் கடைசி குண்டு, சார்பட்டா பரம்பரை, ரைட்டர் படங்களை தயாரித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பா ரஞ்சித் தற்போது குதிரைவால் படத்தை தயாரித்துள்ளார்.

இரட்டை இயக்குநர்கள்
மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர். கதையை ராஜேஷ் எழுதியுள்ளார். படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார். மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்த மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும் என்பதை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய முயற்சி
இந்தப் படம் முற்றிலும் புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தின் மூலம் புதிய அனுபவத்தை பெறுவார்கள் என்றும் படத்தின் இயக்குநர்கள் மனோஜ் மற்றும் ஷ்யாம் தெரிவித்துள்ளனர். நீலம் புரொடக்ஷன்ஸ் புதிய முயற்சிகளில் படங்களை கொடுத்துவரும் நிலையில்,இந்தப படம் ரசிகர்களை கவரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video

ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாகவும், புதிய அனுபவத்தைக் கொடுக்கும் படமாகவும் அமையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. மார்ச் 18ல் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.