»   »  பா.ரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா?

பா.ரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
காலா படத்துக்கு அப்புறம் பா. ரஞ்சித் அடுத்த படம்- வீடியோ

சென்னை : 'காலா' படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் 'காலா' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 27-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார் பா.ரஞ்சித். அதியன் என்ற புதிய இயக்குநர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

பா.ரஞ்சித்

பா.ரஞ்சித்

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் காலா படம் ஏப்ரல் 27-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தில் நானா படேகர், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அரசியல்

அரசியல்

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினியை வைத்து அரசியல் பேசியிருக்கிறார் ரஞ்சித். சமீபத்தில் 'காலா' டீசர் வெளியாகி ட்ரெண்டானது அனவரும் அறிந்ததே.

அட்டகத்தி தினேஷ்

அட்டகத்தி தினேஷ்

இந்தப் படத்தைத் தொடர்ந்து 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார் பா.ரஞ்சித். அதியன் என்ற புதிய இயக்குநர் இந்தப் படத்தை இயக்குகிறார். பா.ரஞ்சித் ஏற்கெனவே தன்னுடைய நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் மாரி செல்வராஜ் 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

அட்டகத்தி

அட்டகத்தி

பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான 'அட்டகத்தி' படத்தில் ஹீரோவாக நடித்த தினேஷை 'கபாலி' படத்திலும் முக்கியமான ரோலில் நடிக்கவைத்தார் ரஞ்சித். தற்போது, அவர் நடிக்கும் படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pa.Ranjith directed Rajinikanth starred 'Kaala' film will be screened on April 27th. Pa.Ranjith is producing a movie after 'Pariyarum perumal' followed by kaala. This movie lead by 'Attakathi' Dinesh. Adhiyan is directing this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X