»   »  உலகம் ஒருவனுக்கா... ரஜினி "புகழ்" பாட கபிலனுக்கு "தடா" விதித்த பா.ரஞ்சித்

உலகம் ஒருவனுக்கா... ரஜினி "புகழ்" பாட கபிலனுக்கு "தடா" விதித்த பா.ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி டிரெய்லரைப் போலவே பாடல்களும் வைரலாகப் பரவி வருகின்றன. இந்நிலையில், அப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘உலகம் ஒருவனுக்கா' பாடல் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. இப்படத்தில் கவிஞர் கபிலன் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார்.


Pa.Ranjith said no to Rajini song

அதில் ஒரு பாடல், ‘உலகம் ஒருவனுக்கா' என துவங்குகிறது. முதலில் இப்பாடலை வழக்கம்போல ரஜினியின் பெருமைகளைக் கூறுவது போல் எழுதி இருந்தாராம் கபிலன். அதாவது ஏறக்குறைய ‘வந்தேண்டா பால்காரன்' மாதிரி.


ஆனால், அதனை கேட்ட பா.ரஞ்சித், இந்தப் பாடல் ரஜினியின் பெருமைகளை எடுத்துச் சொல்வது போல் இல்லாமல், கபாலி கதையினை கூறுவதுபோல் மாற்றச் சொன்னாராம். அதனைத் தொடர்ந்து அப்பாடலின் வரிகள் மாற்றப்பட்டதாம்.


இதேபோல் இப்பாடல் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து உருவாகியுள்ளது. அதாவது இந்தப்பாடலை கபிலன் சென்னையில் இருந்து எழுத, அதனை மலேசியாவில் இருந்து திருத்தியுள்ளார் ரஞ்சித். பின்னர் இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் ஆஸ்திரேலியாவில் இருந்தபடி இசையமைத்துள்ளார்.

English summary
In an interview, lyricist Kabilan has said that Ulagam Oruvanukka number was first written in the style of Superstar's yesteryear hit song Vandhen Da Paalkaran. But director Ranjith insisted to write the lines supporting the core plot of the movie, and not glorifying the hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil