'தண்டகாரண்யம்' ரிஸ்க்கான படம் தான்.. இசைவெளியீட்டு விழாவில் பா. ரஞ்சித் பேச்சு!

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள 'தண்டகாரண்யம்' திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா வடபழனியில் நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித், இந்த 12 வருடத்தில் நான் சில பேருடன் மட்டும் தான் தொடர்ந்து பயணம் செய்து கொண்டு இருக்கிறேன் சாய் தேவனந்த் என்னுடன் தொடர்ந்து பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் மட்டுமல்லாமல் வேட்டுவம் படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவர் வெறும் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் என்னை நம்புகிற ஒரு நல்ல நண்பராக அவர் மாறி உள்ளார். நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வரவில்லை. தங்களின் படைப்பின் மூலமாக, கலையின் மூலமாக அதை சரி செய்கிற கலைஞர்களாக அவர்கள் இருப்பார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சயிக இருக்கிறது.

Pa Ranjith speech
Photo Credit:

பா ரஞ்சித் பேச்சு: நான் இயக்குநராக வருவேன் என்று நினைக்கவில்லை. அப்படி வந்தால், இப்படிப்பட்ட படங்களைத் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இதே போல,3 ஆண்டுகள் மட்டுமே நீடிப்பேன் என்று நினைத்தேன். அதற்கு காரணம் நான் பேசும் அரசியல் என் காலணியை தாண்டி, அடுத்த இடத்திற்கு சென்று பேசினாலே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படி இருக்கும் போது என் அரசியலை சினிமா உலகம் எப்படி ஏற்றுக் கொள்ளும், இது ஒரு பெரிய முரணான இடமாக இருக்கும் என நினைத்தேன். இதுதான் என் மனதின் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இதை எப்படி அனைவரும் புரிந்து கொள்ளும் மொழியாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து நான் யோசித்துக் கொண்டே இருந்தேன். எனக்கு பிடித்த மூன்று படத்தை எடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், மக்கள் என்னை இயக்குனராக மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளராகவும் ஏற்று கொண்டார்கள். அவர்கள் ஏற்றுக் கொண்டதன் காரணம் காரணமாக நீலம் தயாரிப்பு நிறுவனம் வளர்ந்து இருக்கிறது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பலர் இயக்குனர்களாக மாறியிருக்கிறார்கள், பலர் வெளியே வந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

கலை தான் மாற்றத்தை ஏற்படுத்தும்: இப்போதுள்ள சூழலிலும் படத்தை இயக்குவது, தயாரிப்பது, அதை வெளியிடுவது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. கருத்துக்களை முன்வைத்து எடுக்கக்கூடிய படம் வெற்றி அடையுமா? அது மக்களிடம் சென்று சேருமா என்ற ஒரு கேள்வி இருக்கும். கலைக்குள் அரசியலைக் கொண்டு வரும் பொழுது மிகப்பெரிய பிரச்சனை வரும் என்றார்கள். ஆனால் கலை தான் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு உதாரணம் தான் நேபாளத்தில் தற்போது நடந்த Gen z போராட்டம் நடந்து வருகிறது. நேபாளத்தில் GenZ-க்கு தூண்டுதலாக இருப்பது ஒரு Rapper தான். அவர்களின் கருத்தில் எனக்கு முரண் இருந்தாலும், கலை வழியாக அவர்கள் செய்த விஷயம் முக்கியமானது. தமிழ் சூழலில் திராவிட இயக்கம் எப்படி திரைப்படங்களை மாற்றத்துக்கு பயன்படுத்தியதோ, அப்படி இப்போது நீலம் தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது என்று 'தண்டகாரண்யம்' பட விழாவில் தயாரிப்பாளரும் இயக்குநருமான பா.இரஞ்சித் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X