For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ஜாய் எஞ்சாமி சர்ச்சை.. தெருக்குரல் அறிவை ஓரங்கட்டுவதை ஒத்துக்க முடியாது.. பா. ரஞ்சித் பேட்டி!

  |

  சென்னை: என்ஜாய் எஞ்சாமி பாடல் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

  ஒரு பக்கம் தெருக்குரல் அறிவு தனக்கு யாரும் ட்யூன் கொடுக்கவில்லை என்றும், விழித்துக் கொண்டு இருக்கும் போதே நம்முடைய படைப்பை யாரும் திருட முடியாது என்று பகிரங்கமாக போஸ்ட் போட்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

  அவருக்கு பதில் அளிக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன், பாடகி தீ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் என பலரும் தொடர்ந்து தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்துள்ளனர். இந்நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பி உள்ளது.

  அடுத்த 4 மாசத்துக்கு ட்விட்டர் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன்.. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆவேசம்! அடுத்த 4 மாசத்துக்கு ட்விட்டர் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன்.. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆவேசம்!

  என்ன பிரச்சனை

  என்ன பிரச்சனை

  மஜா நிறுவனம் தயாரிப்பில் தெருக்குரல் அறிவு, பாடகி தீ பாடி ஆடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் சுதேசி பாடலாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை உலகம் முழுவதும் பதிவு செய்தது. என்ஜாய் எஞ்சாமி பாடலுக்காக ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தில் முதலில் தெருக்குரல் அறிவு புகைப்படம் இடம்பெறவில்லை. அது பெரிய சர்ச்சையாக வெடித்தது. தொடர்ந்து அந்த பாடலுக்கு பாடகி தீ மற்றும் சந்தோஷ் நாராயணனே கிரெடிட்ஸ் எடுத்துக் கொள்வதாகவும் தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்படுவதாகவும் எழுந்த சர்ச்சை தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.

  தெருக்குரல் அறிவு அதிருப்தி

  தெருக்குரல் அறிவு அதிருப்தி

  கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூங்காமல் கொள்ளாமல் அந்த பாடலுக்கு கடுமையான உழைப்பை போட்ட தனக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்காமல் மஜா நிறுவனம், சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகி தீ இருட்டடிப்பு செய்து விட்டனர் என்கிற ரீதியில் தனது எதிர்ப்பையும் அதிருப்தியையும் அதிரடியாக இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

  சந்தோஷ் நாராயணன், தீ விளக்கம்

  சந்தோஷ் நாராயணன், தீ விளக்கம்

  தெருக்குரல் அறிவு மட்டுமே இந்த பாடலை உருவாக்கவில்லை. இது ஒரு கூட்டு முயற்சி. காக்கா முட்டை மணிகண்டன் கடைசி விவசாயிக்காக சொன்ன ஒரு விஷயம் தான் இந்த பாடல் உருவாக முதல் காரணம். தெருக்குரல் அறிவின் பங்களிப்பு அதிகம் தான். ஆனாலும், இந்த பாடலுக்காக நானும் இசையமைத்து கொடுத்தேன் என சந்தோஷ் நாராயணன் தனது விளக்கத்தில் கூறியிருந்தார். பாடகி தீயும் தெருக்குரல் அறிவுவை யாரும் ஒதுக்கவில்லை என்று கூறினார்.

  கூப்பிட்டும் வரல

  கூப்பிட்டும் வரல

  செஸ் ஒலிம்பியாட்டில் பாடகி தீ மட்டுமே என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடி ஆடியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. அதில், தெருக்குரல் அறிவு ஏன் கலந்து கொள்ளவில்லை என்கிற கேள்வி தான் தற்போது கிளம்பிய பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர். ஆனால், நிகழ்ச்சியை இயக்கிய விக்னேஷ் சிவன் தெருக்குரல் அறிவு அமெரிக்காவில் உள்ளார். அவரை பலமுறை அழைத்தும் அவர் தான் வரவில்லை என ஒரே போடாக போட்டுள்ளார்.

  பா ரஞ்சித் பளிச்

  பா ரஞ்சித் பளிச்

  இந்நிலையில், ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பேட்டியளித்த இயக்குநர் பா. ரஞ்சித் ஒரு படைப்பாளியை அவன் படைப்பில் இருந்து ஓரங்கட்டுவதை யாராலும் ஒத்துக் கொள்ள முடியாது. இந்த பிரச்சனை குறித்து அறிவே வெளிப்படையாக பேசுவான். நிச்சயம் அவன் பக்கம் நியாயம் இருக்கிறது என பேசியுள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

  கூட்டணி முறிவு

  கூட்டணி முறிவு

  அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பா. ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒன்றாக அறிமுகமானார்கள். 9 ஆண்டுகள் இணை பிரியா நண்பர்களாக இருந்த இருவரும் சார்பட்டா பரம்பரை படம் வரை இணைந்து பணியாற்றிய நிலையில், தெருக்குரல் அறிவு பிரச்சனை தான் இருவரையும் பிரித்து விட்டது என சமூக வலைதளங்களில் பரவலாக ஒரு கருத்து பரவி வருகிறது. பா ரஞ்சித்தின் நட்சத்திரங்கள் நகர்கிறது மற்றும் சியான் 61 படத்திற்கு இசையமைப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Director Pa Ranjith talks about Therukural Arivu issue over Enjoy Enjaami in his recent interview with Tamil Filmibeat. He continues his support on Therukural Arivu over this ongoing issue.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X