»   »  பா விஜய்யை 'அமுக்கிய' இத்தாலிப் பேய்!

பா விஜய்யை 'அமுக்கிய' இத்தாலிப் பேய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவிஞர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட பா விஜய், அடுத்து தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் முதல் முதலாக இயக்கி தயாரிக்கும் படத்துக்கு ஸ்ட்ராபெர்ரி என்று தலைப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் நாயகனும் இவரே.

இந்தப் படத்தில் அவருடன் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆவ்னி மோதி நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் தேவயானி, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

இயக்குநரான கதை

இயக்குநரான கதை

ஸ்ட்ராபெர்ரியின் இயக்குநராக மாறியது குறித்து பா விஜய் கூறுகையில், "ஞாபகங்கள், இளைஞன் என இரண்டு படங்களில் நடித்த பிறகு, அடுத்து ஒரு வெற்றியைப் பெற்றே ஆக வேண்டிய கட்டாயம். இதைவிட்டுவிட்டு பின்வாங்கவும் மனசில்லை. அப்போதுதான் இந்தக் கதை தோன்றியது.

தயாரிப்பும் நானே

தயாரிப்பும் நானே

பலரிடம் சொன்னேன். ஆனால் யாரும் முன்வராத நிலையில், நானே இயக்கி தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்தேன். இயக்குநர், நடிகர் என்பதைவிட தயாரிப்பாளராக இருப்பதுதான் கஷ்டம். அதை இந்தப் படத்தில் உணர்ந்தேன்.

இதுவும் ஆவி கதை

இதுவும் ஆவி கதை

ஸ்ட்ராபெர்ரி ஆவிகள் பற்றிய கதைதான். அதுபற்றி ஆய்வு செய்யும் ஒருவரைச் சுற்றி நிகழும் கதை. திகில் கலந்த சிரிப்புக் கதை இது. நிறைய ஆய்வு செய்து இந்தக் கதையை உருவாக்கி படமாக்கினேன். இந்த மாதிரி படங்களுக்குத்தான் இப்போது மக்கள் குடும்பம் குடும்பமாகச் செல்கிறார்கள். குறிப்பாக குழந்தைகளைக் கவரும் பல விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன," என்றார்.

பேய் அனுபவம்

பேய் அனுபவம்

அவரிடம், உங்களுக்கு பேய் நம்பிக்கை உள்ளதா... அப்படி ஏதும் அனுபவமிருந்தால் சொல்லுங்கள், என்றோம்.

"பேயை நேரடியாக பார்த்ததில்லை என்றாலும், அதை நம்புகிறேன். எனக்கு ஒரு பேய் அனுபவமும் உள்ளது. நான் இத்தாலியில் தங்கியிருந்தபோது, அந்த ஓட்டல் அறைக்கு வெளியே யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்ததும் வெளியே மங்களாக ஒரு உருவம் நின்றிருந்தது. என்னிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டியது. வாங்கி வந்து வைத்துவிட்டு மீண்டும் படுத்துவிட்டேன்.

அமுக்கிய பேய்

அமுக்கிய பேய்

அடுத்த சில நிமிடங்களில், யாரோ என் மீது உட்கார்ந்து கொண்டு என்னை அமுக்குவதை உணர்ந்தேன். மூச்சு முட்டியது. உடனே திமிறிக் கொண்டு எழுந்து வெளியில் ஓடினேன். பக்கத்து அறைகளிலிருந்த நண்பர்களை எழுப்பிக் கேட்டால், அவர்களுக்கும் அதே அனுபவம்.

பேய் சொல்ல வந்தது என்ன?

பேய் சொல்ல வந்தது என்ன?

அடுத்த நாள் அங்குள்ள ஒரு ஆவி நிபுணரிடம் இதுபற்றி கேட்டபோது 'ஆவிகள் எதையோ நம்மிடம் கூற விழையும் போது, இப்படி நடக்கும்' என்றார். நான் அதை நம்பினேன்," என்றார் பா விஜய்.

பா விஜய்கிட்ட அந்த ஆவி அப்படி என்ன சொல்ல வந்திருக்கும்...? ஸ்ட்ராபெர்ரி-ன்னு ஒரு படம் எடுப்பா-ன்னா!

English summary
Lyricist turned director Pa Vijay says that he has realised a ghost during his Italian trip.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil