»   »  புலியோடு மல்லுக் கட்டும் பாயும் புலி!

புலியோடு மல்லுக் கட்டும் பாயும் புலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புலி என்று விஜய் தன் படத்தின் தலைப்பை அறிவித்த சில தினங்களில், தன் படத்துக்கு ரஜினியின் பாயும் புலி என்ற தலைப்பை அறிவித்தார் விஷால்.

இப்போது ஆடியோ ரிலீஸ், படம் ரிலீஸ் என பல வகையிலும் புலியோடு மல்லுக்கட்டுகிறது இந்த பாயும் புலி.


விஜய் புலி

விஜய் புலி

சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய படம் புலி. விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதேவி, சுதிப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.


ஆகஸ்ட் 2

ஆகஸ்ட் 2

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் இசையை ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இன்னும் அறிவிக்கவில்லை.
அறிவித்தார் விஷால்

அறிவித்தார் விஷால்

இதே தேதியில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி' படத்தின் இசை வெளியாகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தியும் இன்று வெளியாகியுள்ளது.


இமான்

இமான்

பாயும் புலி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிகிறது. சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.


படம் செப்டம்பரில்

படம் செப்டம்பரில்

இந்தப் படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடப் போவதாக விஷால் அறிவித்துள்ளார். படம் தொடங்கும்போதே இதை அவர் அறிவித்துவிட்டார். விஜய் படமும் இதே செப்டம்பரில்தான் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Vishal's Paayum Puli will be giving a tough fight to Vijay's Puli in coming September.
Please Wait while comments are loading...