»   »  பாயும் புலி ஓசையே பாகுபலி மாதிரி இருக்கிறது! - லிங்குசாமி

பாயும் புலி ஓசையே பாகுபலி மாதிரி இருக்கிறது! - லிங்குசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாயும் புலி என்ற தலைப்பின் ஓசையே பாகுபலி மாதிரி ஒலிக்கிறது என்றார் இயக்குநர் லிங்குசாமி.

பாயும் புலி படத்தின் சிலுக்கு மரமே என்ற சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டுப் பேசிய லிங்குசாமி கூறுகையில், "பாயும்புலியின் ஓசையே பாகுபலி என்று கேட்பது போல் தெரிகிறது. அதே போல வெற்றியும் தொடரட்டும்.

விஷால் என் கதாநாயகன். அவர் நடிப்பில் 'சண்டக்கோழி 2' விரைவில் ஆரம்பமாக உள்ளது. செப்டம்பர் 9ல் படம் தொடங்குகிறது,'' என்றார்.

ஏமாத்திட்டாரே சுசீந்திரன்..

ஏமாத்திட்டாரே சுசீந்திரன்..

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பேசும் போது, ''நியூசிலாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு என்றார் சுசீந்திரன். ஆனால் இங்கேயே முடித்து எங்களை ஏமாற்றிவிட்டார். கம்போடியா போகாமல் காரைக்குடியிலேயே முடித்துவிட்டார்," என்றார்.

சுசீந்திரன்

சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன் பேசும் போது, ''நான் மகான் அல்ல' படத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த படம் என் மனசுக்கு நெருக்கமான படம் இது. மதன் சார் இந்தப்படம் பிரமாண்டமாக வருவதற்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார், " என்றார்.

டி இமான்

டி இமான்

டி.இமான் பேசுகையில், ''இது எனக்கு ஸ்பெஷலான படம்.' பாண்டியநாடு', 'ஜீவா' வுக்குப் பிறகு சுசீயுடன் இணையும் 3 வதுபடம்.வேந்தர் மூவிசுக்கான முதல்படம். இதில் 5 பாடல்களை அருமையாக வைரமுத்து எழுதியுள்ளார்,'' என்றார்.

ஜெயப்பிரகாஷ்

ஜெயப்பிரகாஷ்

ஜெயபிரகாஷ்பேசும் போது, "விஷால் படத்தில் நான் ஒரு ஓரமாகக் கூட நிற்பேன். சுசீயும் அப்படி வாய்ப்பு கொடுப்பார். இஷ்டப்பட்டு வேலை பார்த்தோம். எனவே இப்படத்தில் கஷ்டம் தெரியவில்லை,'' என்றார்.

விழாவில் கலை இயக்குநர் ராஜீவன், நடிகர் சூரி, இயக்குநர்கள் பாண்டிராஜ்,திரு, வி.மியூசிக் ஐஸ்வர்யா, உடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ஆகியோரும் கலந்து வாழ்த்தினார்ககள்.

English summary
Director Lingusamy says that the title Paayum Puli is sounds like Bahubali.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil