twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்வதேச பட விழாக்களில் விருதுகளை குவித்த "பச்சை விளக்கு"ஓடிடியில் ரிலீஸ்!

    |

    சென்னை : டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள 'பச்சை விளக்கு' திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

    பூடான் நாட்டிலுள்ள பரோ என்ற இடத்தில் நடைபெற்ற ட்ராக் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது, 'பச்சை விளக்கு' திரைப்படம். இந்தியாவில் நடைபெற்ற ட்ரிப்ள் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதினை வென்றுள்ளது.

    உலகம் முழுக்க இருக்கும் தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை , குறிப்பாக நல்ல சமூக கருத்துக்களை கொண்ட படங்களை மிகவும் பாராட்டுகின்றனர் . சாலை விதிகளை பற்றி சுவாரஸ்யமாகவும் காமெடி கலந்த அறிவுரைகளை மிகவும் எளிமையாக சொல்லி பாராட்டுகளை பெற்று உள்ளார் இயக்குனர் .

    நிறைய விருதுகள்

    நிறைய விருதுகள்

    நியூயார்க் மூவி அவார்ட்ஸ் மற்றும் அப்ரோனடட் திரைப்பட விழாவிலும் இறுதித் தேர்விலும், மேலும் லண்டனில் சி.கே.எப். சர்வதேச திரைப்பட விழா, இத்தாலியில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவான ப்ளாரன்ஸ் திரைப்பட விழா, அமெரிக்காவில் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழா, சவுத் பிலிம் அண்ட் அர்ட்ஸ் அகடமி விழா மற்றும் பர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர்ஸ் விழாவிலும் அதிகாரப்பூர்வ தேர்வாக கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளது, ‘பச்சை விளக்கு' திரைப்படம்.

    தீபாவளி திருநாளில்

    தீபாவளி திருநாளில்

    இந்த நிலையில் தீபாவளி முதல் உலகம் முழுவதும் இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார், இந்தப் படத்தின் இயக்குநர் டாக்டர் மாறன் ஊடங்கங்களிடம் பேசிய பொழுது "பெண்களை ஏமாற்றி காதலிப்பது போல நடித்து ஆபாச படம் எடுத்து அதை வைத்து பெற்றோர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்து காட்டும் விழிப்புணர்வு படமாக பச்சை விளக்கும் படத்தை இயக்கி இருக்கிறேன். இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சி செய்து வந்தேன். இந்த தீபாவளி திருநாளில் உலகம் எங்கும் OTTMOVIE என்ற ஓடிடிதளத்திலும், www.ottmovie.in என்கிற இணையதளம் மூலமாகவும் அனைவரும் பார்க்கும் வரையில் ஏற்பாடு செய்யபட்டு உள்ளது என்றார்.

    இப்போதைய சூழ் நிலைக்கு

    இப்போதைய சூழ் நிலைக்கு

    தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சனைகள் ஒரு பக்கம் விஸ்வரூபம் எடுத்து கொண்டு இருக்கிறது . வீ பீ எப் கட்டணம் குறித்து நிறைய சிக்கல்கள் இருக்கும் சூழலை பார்க்கும் பொழுது சமரச நிலை வருவது இன்னும் நிறைய நாட்கள் ஆகும் என்பது நன்கு புரிகிறது . சிறிய படங்கள் வழி தெரியாமல் தவிக்கின்றனர் .ஓ டீ டீ என்ற இந்த வாய்ப்பு மட்டும் தான் இப்போதைய சூழ் நிலைக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது

     நல்ல படங்களை

    நல்ல படங்களை

    நல்ல படங்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் தமிழ் மக்கள் எப்போதும் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள். இந்த 'பச்சை விளக்கு' திரைப் படத்திற்கும் அதே போன்றதொரு நல்ல வரவேற்பை தருவார்கள் என்கிற பெரும் நம்பிக்கையும், பெரிய எதிர்ப்பார்ப்பும் எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ள தயாரிப்பாளர் டாக்டர் சி.மணிமேகலை,தொடர்ந்து நல்ல படங்களை பெற்று இந்த ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறி இருக்கிறார். இந்த தீபாவளி லாக்டவுன் முடிந்து வரும் சிறப்பு தீபாவளி . நிறைய படங்கள் குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களை அதிகம் தியேட்டரிலும் ஓ டீ டீ யிலும் அதிகம் பார்க்கலாம் என்பது தான் நிதர்சனமான உண்மைபெரிய நடிகர்கள் படங்கள் என்ற மிக பெரிய போட்டி இந்த தீவாளிக்கு கிடையாது என்பது தான் கூடுதல் தகவல்.

    English summary
    'Pachai Vilakku' movie is out on OTT Platform on the 14th
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X