»   »  வயசான காலத்தில் கதைகதையா அளந்து விடும் பாரதிராஜா! #Padaiveeran

வயசான காலத்தில் கதைகதையா அளந்து விடும் பாரதிராஜா! #Padaiveeran

Posted By:
Subscribe to Oneindia Tamil
சில நிமிட காட்சிகளில் கதையை அளந்துவிடும் பாரதிராஜா..!!

சென்னை : மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'படைவீரன்'.

'படைவீரன்' படத்தில் ஹீரோவாக பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்துள்ளார்.

'படைவீரன்' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் சில நிமிட் காட்சி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

படைவீரன்

படைவீரன்

'கடல்', 'ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'படைவீரன்'. இப்படத்தின் ஹீரோவாக பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ளார்.

பாரதிராஜா

பாரதிராஜா

பாரதிராஜா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 'எவோக்' என்ற நிறுவனம் சார்பில் மதிவாணன் தயாரித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இதற்கு ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தனுஷ் பாடியுள்ளார்

தனுஷ் பாடியுள்ளார்

அகில், கலையரசன், இயக்குநர்கள் விஜய்பாலாஜி, மனோஜ் குமார், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை பிப்ரவரி 2-ம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.

பாரதிராஜா சீன்

'படைவீரன்' படத்தின் நில நிமிடக் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. அதிகாரப் பூர்வமாக வெளியான இந்தக் காட்சியில், முன்னாள் ராணுவ வீரரான பாரதிராஜா ஊர்க்காரர்களிடம் தனது மிலிட்டரி அனுபவம் பற்றி அளந்து விட்டுக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

English summary
Vijay Yesudas has acted as a hero in the film 'PadaiVeeran'. Also, director Bharathiraja has acted in the prominent role. 'Padaiveeran' film's sneak peek was released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil