twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘படித்தவுடன் கிழித்து விடவும்’.. இன்சூரன்ஸ் மோசடி செய்தவர்களைப் பழி வாங்கும் பேய்!

    படித்தவுடன் கிழித்து விடவும் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் கருணாநிதி என்ற நடிகர்.

    |

    சென்னை: படித்தவுடன் கிழித்து விடவும் படம் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார் மன்னார்குடியைச் சேர்ந்த கருணாநிதி.

    ஐ கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.உஷா தயாரித்திருக்கும் படம் 'படித்தவுடன் கிழித்துவிடவும்'. கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், வில்லனாக நடித்துள்ளார் மன்னார்குடியைச் சேர்ந்த கருணாநிதி.

    இன்றைய வாழ்க்கையில் செல்போன் வாங்கினால் கூட இன்சூரன்ஸ் செய்வது என்பது அவசியமாகி விட்டது. ஆனால், இன்சூரன்ஸிற்கு கட்டிய பணத்தை அனைவருமே பின்னர் முறைப்படி திரும்பப் பெறுவது இல்லை. அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு இறந்தவர்களின் ஆவிகள், மனிதர்களின் துணை கொண்டு எப்படி பழிவாங்கியது என்பதை காமெடி கலந்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஹரி உத்ரா.

    இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள கருணாநிதி, நிஜ வாழ்க்கையில் அடித்தட்டு நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறி தொழிலதிபராகி, இன்று நடிகர் ஆகியுள்ளார்.

    தான் கடந்து வந்த பாதை குறித்து ஒன் இந்தியாவிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சொந்தப் பெயர் தான்:

    சொந்தப் பெயர் தான்:

    என் சொந்த ஊர் மன்னார்குடி. திமுக அபிமானியான என் தாய்மாமா, எனக்கு வைத்த பெயர் தான் கருணாநிதி. அந்தப் பெயரை மாற்ற விரும்பாமல் தான், சினிமாவிற்கு வந்த பிறகும் சொந்த பெயரிலேயே நடிக்கிறேன்.

    முதல் சம்பளம்:

    முதல் சம்பளம்:

    நான் 2ம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். குடும்ப வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்க இயலவில்லை. சிறுவயதிலேயே டீக்கடையில் வேலைக்குச் சென்று விட்டேன். என் முதல் சம்பளம் மாதம் 50 பைசா.

    அடுத்த கட்டம்:

    அடுத்த கட்டம்:

    பின்னர் அங்கிருந்து பேப்பர் மில் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அதனைத் தொடர்ந்து கையில் இருந்த சேமிப்புப் பணத்தில் சிறிய ஸ்வீட் ஸ்டால் ஆரம்பித்தேன். தீவிர உழைப்பின் பயனாக கொஞ்ச நாளில் ஹோட்டல், பின்னர் பாலி பேக்ஸ் கம்பெனி, ஸ்டூடியோ என தொழிலதிபர் ஆனேன்.

    குறும்படங்கள்:

    குறும்படங்கள்:

    வாழ்க்கையில் பணம் சம்பாரிப்பதற்காக ஒருபுறம் தீவிரமாக உழைத்து வந்த போதும், எனக்குள் இருந்த நடிப்பு ஆர்வத்தால், ஐந்து குறும்படங்கள் தயாரித்தேன். அவை அனைத்துமே சமூக அக்கறையுள்ள கதைக்களத்தைக் கொண்டவை. குறிப்பாக ராங் நம்பர் என்ற குறும்படம் சைபர் கிரைம் பற்றியது.

    பெரிய திரை அறிமுகம்:

    பெரிய திரை அறிமுகம்:

    சினிமாவில் நடிக்கத் தொடங்கியது ஒரு எதிர்பாராத சம்பவம் தான். ஒருமுறை தெரு நாய்கள் பட ஷூட்டிங் மன்னார்குடியில் நடந்தது. அதனை காரில் சென்ற நான் வேடிக்கை பார்ப்பதற்காக நின்றேன். அப்போது என்னைப் பார்த்த இயக்குநர் ஹரி உத்ரா, நான் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகவெட்டுடன் இருப்பதாகக் கூறி, அப்படத்தில் சின்ன வில்லன் ரோல் நடிக்கக் கொடுத்தார்.

    இயல்பான வில்லன்:

    இயல்பான வில்லன்:

    அதனைத் தொடர்ந்து அவரின் அடுத்தபடமான, ‘படித்தவுடன் கிழித்து விடவும்' படத்தில் என்னை முதன்மை வில்லனாக்கி இருக்கிறார். இப்படத்தில் அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு இன்ஸ்யூரன்ஸ் மோசடி செய்யும் வில்லனாக நடித்துள்ளேன். படத்தில் என் கதாபாத்திரம் இயல்பானதாக இருக்கும்.

    சிலை கடத்தல்:

    சிலை கடத்தல்:

    என் கதாபாத்திரம் போன்ற வில்லன்களை அனைவருமே வாழ்க்கையில் சந்தித்திருப்போம். பார்ப்பதற்கோ, செயல்களிளோ கொடூரமாக இல்லாமல், இயல்பான சக மனிதர்கள் போன்ற கதாபாத்திரம் என்னுடையது. எனது அடுத்த படம் சிலைக் கடத்தல் பற்றியது. வரும் 17ம் தேதி மதுரையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

    ஆசை:

    ஆசை:

    தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையல்ல. நடிப்பில் சாதிக்க வேண்டும். குறிப்பாக மாயாண்டி குடும்பத்தார் போன்ற குடும்பப்பாங்கான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆசை. படத்தில் என் கதாபாத்திரத்தைப் பார்த்து மற்றவர்கள் திருந்தும் படியான கதைகளில் நடிக்க விரும்புகிறேன்.

    ரெட் ஹீலியம் கேமரா:

    ரெட் ஹீலியம் கேமரா:

    ‘படித்தவுடன் கிழித்து விடவும்' படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது. இப்படத்துக்காக மன்னார்குடி பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் போட்டு படமாக்கியுள்ளனர். ‘ரெட் ஹீலியம்' கேமராவால் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Padithavudan kilithuvidavum movie's main Villain Karunanidhi shared his experience wih oneindia, how he turned actor from a businessman.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X