»   »  ஒற்றைத் தாயாய் நிறையப் போராடுகிறேன்.. பத்மாலட்சுமி உருக்கம்

ஒற்றைத் தாயாய் நிறையப் போராடுகிறேன்.. பத்மாலட்சுமி உருக்கம்

By Sudha
Subscribe to Oneindia Tamil

லண்டன்: சல்மான் ருஷ்டியின் முன்னாள் காதலியான பத்மாலட்சுமி தனது ஒற்றைக் குழந்தையுடன் தன்னந்தனியாக போராட்ட வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.

பத்மா பார்வதி லட்சுமி

பத்மா பார்வதி லட்சுமி

1970ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி பிறந்த பத்மா பார்வதி லட்சுமி.. சுருக்கமாக பத்மா லட்சுமி, இந்தியாவைப் பூர்வீமாகக் கொண்டவர். சமையல் கலை நிபுணர், நடிகை, மாடல், டிவி ஹோஸ்ட் என்று பல அவதாரம் கொண்டவர். சல்மான் ருஷ்டியை ஒரு காலத்தில் காதலித்தவர்.

காதலுடன் சமையல் கலையிலும் வல்லவர்

காதலுடன் சமையல் கலையிலும் வல்லவர்

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணர்களில் பத்மாவுக்கும் தனி இடம் உண்டு. ஈஸி எக்ஸாட்டிக் என்ற இவரது நூல் சிறந்த முதல் புத்தகம் என்ற விருதைப் பெற்றுள்ளது. அமெரிக்க ரியாலிட்டி ஷோவான டாப் செப் நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்தளித்து வருகிறார்.

சென்னைப் பொண்ணு

சென்னைப் பொண்ணு

பத்மா லட்சுமி இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். அதிலும் சென்னையில் பிறந்த, தமிழ்ப் பெண்.

டெல்லுக்குப் பிறந்த குழந்தை

டெல்லுக்குப் பிறந்த குழந்தை

ஆடம் டெல் என்பவருடன் உறவில் இருந்தபோது பத்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் கிருஷ்ணா தியா.

பத்மாவின் காதலர்கள்

பத்மாவின் காதலர்கள்

பத்மாவுக்கு நிறைய காதலர்கள்.. ஒரு கணவர். 2004ம் ஆண்டு சல்மான் ருஷ்டியை மணந்தார். 2007ல் இந்த ஜோடி பிரிந்தது. பின்னர் ஆடம் டெல்லுடன் காதல் மலர்ந்தது, இருவரும் உறவில் இறங்கினர். இதன் விளைவாக பெண் குழந்தை பிறந்தது. அதேபோல இளவரசி டயானாவின் முன்னாள் நிதி ஆலோசகரான தியோடர் டெடி போர்ஸ்ட்மேன் என்பவருடன் உறவில் ஈடுபட்டார். கிருஷ்ணா பிறந்த சமயத்திற்கு முன்பிருந்தே இந்த உறவு இருந்து வந்தது.

சொத்துக்களைக் கொட்டிக் கொடுத்த போர்ஸ்ட்மேன்

சொத்துக்களைக் கொட்டிக் கொடுத்த போர்ஸ்ட்மேன்

பத்மாவுடன் மிக நெருக்கமாக பழகி வந்தாலும் கூட அவருக்குப் பிறக்காத குழந்தை கிருஷ்ணாவுக்காக தனது பெரும் சொத்துக்களை கொட்டிக் கொடுத்தார் போர்ஸ்ட்மேன். கிருஷ்ணாவுக்காக அறக்கட்டளையை நிறுவி சொத்துக்களையும் எழுதி வைத்து விட்டுப் போனார். அந்த சொத்து மதிப்பு 1.8 பில்லியன் டாலராகும். அத்தனையும் பத்மாவுக்குக் கிடைத்தது.

ஒற்றைக் குழந்தையுடன் போராட்டம்

ஒற்றைக் குழந்தையுடன் போராட்டம்

42 வயதான பத்மா தனது வாழ்க்கை குறித்துக் கூறுகையில், நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன், பணம், வசதி எல்லாமே இருக்கிறது. ஆனால் இரண்டரை வயது குழந்தையுடன் ஒற்றைத் தாயாய் எனது வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கிறது. சில சமயங்களில் சலிப்பு வருகிறது. ஆனாலும் கிருஷ்ணாவைப் பார்க்கும்போது அது பறந்து போய் விடும்.

ஜிம் என்னை கூலாக்குகிறது

ஜிம் என்னை கூலாக்குகிறது

புத்தகம் படிப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. மனதை லேசாக்க உதவும். அதேபோல ஜிம்முக்குப் போவதும் என்னை கூலாக்க உதவுகிறது. இருப்பினும் 2 மாதமாக ஜிம்முக்குச் சரியாகப் போக முடியவில்லை. இதனால் கொஞ்சம் போல குண்டடித்து விட்டேன்.

பாசிட்டிவாக இருக்க விரும்புகிறேன்!

பாசிட்டிவாக இருக்க விரும்புகிறேன்!

எனது தாயாரிடம் கூட இவ்வளவு பணம் இருந்ததில்லை. அவ்வளவு பணம் எனக்கு இருக்கிறது. எனவே வாழ்க்கையில் பாசிட்டிவாக எதையாவது சாதிக்க விரும்புகிறேன் என்று கூறுகிறார் பத்மா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    She may be one of People's Most Beautiful Women, have a successful television career and a beautiful daughter but Padma Lakshmi says even she struggles as a single mother. The Top Chef host has revealed to More magazine that she is often overwhelmed as she attempts to juggle her career and look after two-year-old Krishna Thea.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more