»   »  100 கோடி கிளப்பில் இணையும் 'பத்மாவதி'... அமெரிக்காவிலும் வெறித்தன வசூல்!

100 கோடி கிளப்பில் இணையும் 'பத்மாவதி'... அமெரிக்காவிலும் வெறித்தன வசூல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
100 கோடி கிளப்பில் இணையும் 'பத்மாவதி'

சென்னை : சூப்பர் ஹிட்டாக வேண்டிய மெர்சல் திரைப்படத்தை மெகா ஹிட் ஆக்கியது சர்ச்சைகள் தான். பத்மாவத் படத்திற்கும் அப்படிதான் நடந்துள்ளது.

பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர் தீ வைக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தனர். ஆனால், படம் அதையும் தாண்டி ரிலீஸ் ஆனது.

கடும் எதிர்ப்பு, சர்ச்சைகளுக்கு இடையே வெளியான பத்மாவத் திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து ரூ.100 கோடி கிளப்பில் எளிதாக நுழைகிறது.

தீபிகா படுகோனேவின் பத்மாவத்

தீபிகா படுகோனேவின் பத்மாவத்

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோனா, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் கூட்டணியில் உருவான பத்மாவத் திரைப்படத்துக்கு படப்பிடிப்பு காலத்திலிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கடும் கண்டனத்துக்கு உள்ளானார்.

வழக்குகள் கடந்து

வழக்குகள் கடந்து

'பத்மாவத்' படம் தயாரானதும், சென்சார் பிரச்னை. அது ஒரு வழியாக முடிந்தால் வழக்குகள், வன்முறை போராட்டங்கள் என மீண்டும் சர்ச்சை, மாநில அரசுகளின் தடை என பல பிரச்னைகளை சந்தித்து ஒருவழியாக கடந்த 26-ம் தேதி வெளியானது.

முதல் நாளில் 19 கோடி

முதல் நாளில் 19 கோடி

ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 4 மாநிலங்களில் படம் பல இடங்களில் வெளியாகாத நிலையிலும் முதல் நாளில் 19 கோடி வசூலித்து சாதனை படைத்தது 'பத்மாவத்'.

100 கோடி கிளப்

100 கோடி கிளப்

இரண்டாம் நாள் வசூல் 32 கோடி, ஞாயிறு வசூல் கிட்டத்தட்ட 30 கோடி. இன்றைக்கு படம் பார்க்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளது மட்டும் 27 கோடி. எனவே இன்று மாலை பத்மாவத் 100 கோடி கிளப்பில் இணைகிறது.

போராட்டங்கள் குறைகின்றன

போராட்டங்கள் குறைகின்றன

படத்தில் சித்தூர் ராணி பத்மாவதியை தெய்வத்துக்கு நிகராக காட்டப்பட்டிருக்கிற செய்தி அறிந்து போராட்டங்கள் குறைந்துள்ளன. படம் வசூலை குவிப்பதால் முதலில் திரையிடத் தயங்கிய தியேட்டர்காரர்கள், இப்போது படத்தை போலீஸ் பாதுகாப்புடன் திரையிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பாகுபலி சாதனையை முந்தியிருக்கலாம்

பாகுபலி சாதனையை முந்தியிருக்கலாம்

தற்போது வெளிவராத மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் இந்தி பேசும் மக்களை அதிகமாகக் கொண்டது. இங்கும் படம் வெளியாகி இருந்தால் படத்தின் வசூல் 200 கோடியை தொட்டு பாகுபலியின் சாதனையை முறியடித்திருக்கும் என்கிறார்கள்.

தமிழகத்திலும் டாப்

தமிழகத்திலும் டாப்

தமிழ்நாட்டில் பத்மாவத்துடன் வெளிவந்த தமிழ் படங்களை விட பத்மாவத் வசூல் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட பிரதிகளை அதிகப்படுத்தி மேலும் கூடுதலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

மிகப்பெரிய ஓப்பனிங்

மிகப்பெரிய ஓப்பனிங்

பத்மாவத் அமெரிக்காவில் 4.5 மில்லியன் டாலர் வசூல் செய்து ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்டுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியாவிலும் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்து இந்திய படங்களிலேயே மிகப்பெரும் ஓப்பனிங்கை பெற்றுள்ளது.

English summary
Padmaavat collection is more than Tamil films release with Padmaavat in Tamilnadu. Padmaavat, which collects more than 100 crores in India, joins 100 crore club this evening.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil