twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பத்மாவத்'துக்கு உண்மையில் பொங்க வேண்டியது யார்? ராஜ்புத்ஸா.. கில்ஜியா? #Padmaavat

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    100 கோடி கிளப்பில் இணையும் 'பத்மாவதி'

    டெல்லி : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகியிருக்கும் படம் 'பத்மாவத்'.

    பல எதிர்ப்புகளைச் சந்தித்து, தடை முயற்சிகளை நீதிமன்றத்தின் வாயிலாக எதிர்கொண்டு நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமையன்று வெளியானது 'பத்மாவத்'.

    ராஜபுத்திர கர்ணி சேனா அமைப்பினரும், இந்து முன்னணியினரும் போராட்டத்திற்கான காரணமாகக் கூறியதைப் போல 'பத்மாவத்' படத்தில் எந்தக் காட்சியும் இடம்பெறவில்லை.

    சஞ்சய் லீலா பன்சாலி

    சஞ்சய் லீலா பன்சாலி

    கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'பத்மாவதி' படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் சஞ்சய் லீலா பன்சாலி. அது முதலே எதிர்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தாக்கப்பட்டதோடு, படத்தின் செட்களும் சேதப்படுத்தப்பட்டன.

    போராட்டம்

    போராட்டம்

    படத்தின் ஷூட்டிங் முடிந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியிடப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் எதிர்ப்பாளர்கள் மேலும் வன்மையாக போராட்டங்களில் இறங்கினார்கள். இப்படத்தில் பத்மாவதியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுத்தால் பல கோடி பரிசு என கர்ணி சேனா அமைப்பு அறிவித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தலைக்கு விலை

    தலைக்கு விலை

    இயக்குநர் பன்சாலி, நடிகை தீபிகா படுகோனே ஆகியோரின் தலையைக் கொண்டு வந்தால் 5 கோடி பரிசு என அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர். இது திரையுலகினரிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

    யாரும் கேட்கவில்லை

    யாரும் கேட்கவில்லை

    போராட்டக்காரர்கள் சொல்வது போல ராஜபுத்திரர்களையும், ராணி பத்மாவதியையும் இந்தப் படத்தில் தவறாகச் சித்தரிக்கவில்லை என உறுதியாகச் சொன்னார் பன்சாலி. ஆனால், எதிர்ப்பாளர்கள் அவரது பேச்சைக் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை.

    டைட்டில் மாற்றம்

    டைட்டில் மாற்றம்

    தொடர்ந்து தங்களது போராட்டத்தை அதிகப்படுத்தி, 'பத்மாவதி' படத்தை வெளியிட தடை கோரினார்கள். சென்சார் போர்டு படத்தின் சில காட்சிகளையும், டைட்டிலையும் மாற்றவேண்டும் என பரிந்துரை செய்தது.

    பத்மாவத்

    பத்மாவத்

    சென்சார் போர்டு பரிந்துரைப்படி, 'பத்மாவத்' எனப் பெயர் மாறியது படம். அதற்குப் பின்பும் சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட, நீதிமன்றம் தடையை நீக்கி அதிரடியாக உத்தரவிட்டது. இதனால், கடந்த 25-ம் தேதி நாடு முழுவதும் ரிலீஸ் ஆனது 'பத்மாவத்'.

    ராஜபுத்திரர்களுக்கு எதிராக இல்லை

    ராஜபுத்திரர்களுக்கு எதிராக இல்லை

    நாடு முழுவதும் கிளம்பிய சர்ச்சைகளால் 'பத்மாவத்' மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு கொண்டிருந்தனர். 'பத்மாவத்' படத்தில் பத்மாவதியை அவமதிக்கும் காட்சி இடம்பெறவில்லை. மாறாக, சுல்தான் அலாவுதீன் கில்ஜிதான் சூழ்ச்சி நிறைந்த அரசனாக காட்டப்பட்டிருக்கிறார்.

    ராஜபுத்திரர்களின் பெருமை

    ராஜபுத்திரர்களின் பெருமை

    ராஜபுத்திரர்கள் வீரதீரம் நிறைந்தவர்களாகவும், கொள்கை நெறி தவறாதவர்களாகவும், வசங்களின் மூலம் நிறுவப்படுகிறார்கள். ராஜபுத்திரர்களின் பெருமையைத் தூக்கிப் பிடிக்கும் வசனங்களைத்தான் பத்மாவதியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனேவும், ரத்தன் சிங்காக நடித்திருக்கும் ஷாகித் கபூரும் பேசுகிறார்கள்.

    பெண் பித்தன் கில்ஜி

    பெண் பித்தன் கில்ஜி

    இதற்கு நேர்மாறாக, சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக நடித்திருக்கும் ரன்வீர் சிங் கொடுங்கோலனாக, சூழ்ச்சியால் பதவிக்கு வருபவனாக, பெண் பித்தனாக, மாற்றான் மனைவி மேல் ஆசை கொள்கிறவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

    இதை ராஜ்புத்ஸ் ஏன் எதிர்த்தார்கள்

    இதை ராஜ்புத்ஸ் ஏன் எதிர்த்தார்கள்

    சூபி கவிஞர் மாலிக் முகமது ஜெய்சியின் கவிதையைக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை என பொறுப்புத் துறப்பு டிஸ்கிளைமரையும் போட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் முதலில் தோன்றுவது இதை ஏன் ராஜபுத்திர அமைப்பினர் எதிர்த்தார்கள் என்பதுதான்.

    கொதிக்க வேண்டியது யார்?

    கொதிக்க வேண்டியது யார்?

    இயக்குநர் பன்சாலி சொன்னதை நம்பாமல், பரபரப்பைக் கிளப்பி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள் ராஜபுத்திரர்கள். ஆனால், உண்மையில் இந்தப் படத்திற்காக கொதித்திருக்க வேண்டியவர்கள் அலாவுதீன் கில்ஜி வம்சத்தினரும், ஆதரவாளர்களும் தான்.

    முதலில் படத்தைப் பாருங்க சாமிகளா..

    முதலில் படத்தைப் பாருங்க சாமிகளா..

    இன்னும் கூட வட மாநிலங்களில் பத்மாவத் படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் எல்லோரும் 'பத்மாவத்' படத்தைப் பார்த்து பிறகு முடிவு செய்யலாம். படம் பார்த்த ஒரு அமைப்பினர் 'பத்மாவத்' மீதான வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார்களாம்.

    English summary
    Deepika Padukone, Ranveer Singh and Shahid Kapoor are doing important roles in 'Padmaavat' directed by Sanjay Leela Bhansali. Faced with various protests and banning efforts 'Padmaavat' was released last Thursday. 'Padmavat' is actually not against rajputs. In padmaavat movie, Sultan Alauddin Khilji has been shown to be a cunning king.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X