twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகமே வியக்கும் தமிழன்... பேட்மேனின் உண்மைக் கதை! #Padman

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    Padman Challenge-க்கு நீங்க ரெடியா ?

    சென்னை : அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடிப்பில் பால்கி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பேட் மேன்' படம் நாளை நாடு முழுவதும் வெளியாக இருக்கிறது.

    தமிழரான அருணாசலம் முருகானந்தம், குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்து சமூக ஆர்வலராகப் பங்காற்றி வருபவர்.

    பெண்களுக்காக நாப்கின் புரட்சி செய்து 'பத்மஶ்ரீ' விருது வென்ற அருணாசலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை தான் பாலிவுட்டில் 'பேட்மேன்' (Padman) படமாகி இருக்கிறது.

    அருணாசலம் முருகானந்தம்

    அருணாசலம் முருகானந்தம்

    கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கை தற்போது பாலிவுட்டில் படமாகி இருக்கிறது. இந்தப் படத்தில் அவரது வேடத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருக்கிறார். ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை பால்கி இயக்கியிருக்கிறார்.

    நாப்கின்

    நாப்கின்

    பெண்களுக்கு முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக இருக்கும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்கள் அனேகம். பெண்களின் இந்தச் சிரமத்தைக் குறைப்பதற்காக முயற்சியை மேற்கொண்டு, பல்வேறு இன்னல்களுக்கிடையில் வெற்றிபெற்றவர் அருணாசலம் முருகானந்தம்.

    நாப்கின் விலை

    நாப்கின் விலை

    மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினை வியாபார நோக்கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். நாப்கின்களின் விலையைக் கண்டு மலைக்கும் கிராமப்புறப் பெண்கள் நாப்கின்களைப் பயன்படுத்த முடியாமல் துணிகளைப் பயன்படுத்துகின்றனர்.

    உடல்நல பாதிப்பு

    உடல்நல பாதிப்பு

    இதனால் அவர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இந்தியாவில் இன்று வரை சுமார் 70% பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான நாப்கின்களைப் பயன்படுத்துவதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் சிரமத்தைப் போக்க அருணாசலம் உதவி செய்தார்.

    கஷ்டங்களும் அவமானங்களும்

    கஷ்டங்களும் அவமானங்களும்

    தன் மனைவிக்கு உதவுவதற்காக இயற்கை முறையில் விலை மலிவான நாப்கின்களை உருவாக்க விரும்பினார். பெரு முயற்சிக்குப் பிறகு அதைச் செயல்படுத்தினார். இதைச் சாதிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் மிக அதிகம். இதைப் பற்றி பேசினாலே அசிங்கம் என்று நினைப்பவர்கள் மத்தியில் இவரின் செயல் பெண்களிடையே வரவேற்பைப் பெற்றது.

    நாடு முழுவதும்

    நாடு முழுவதும்

    பாதுகாப்பான முறையில் பெண்கள் பயன்படுத்தும் வகையில் தானே பரிசோதனைகளையும் ஆராய்ச்சியையும் செய்து, பல்வேறு இன்னல்களையும் இவர் எதிர்கொண்டுள்ளார். தற்போது ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரிஸ் என்ற பெயரில் மிகவும் மலிவான விலையில் நாப்கின்களைத் தயாரித்து நாடு முழுவதுமுள்ள கிராமப்புற பெண்களுக்கு விற்றுவருகிறார்.

    லாபமின்றி

    லாபமின்றி

    அவர் தயாரித்த இயந்திரம் , நாப்கின் போன்றவற்றை முறைப்படி காப்புரிமை செய்தாலும் யாருக்கும் விற்கவில்லை. மகளிர் அமைப்புகள், பள்ளிகள், பொதுநல சேவை அமைப்புகள் போன்றவற்றிற்கு லாபமின்றி இயந்திரம், மூலப்பொருட்கள் வழங்கி பயிற்சி அளிக்கிறார்.

    சக்தி வாய்ந்த மனிதர்

    சக்தி வாய்ந்த மனிதர்

    இன்று பல நாடுகளில் பல ஆயிரம் இயந்திரங்கள் மூலம், சுமார் ஒரு கோடிப் பெண்கள் இவரின் சுகாதாரமான நாப்கின்களை குறைந்த விலையில் உபயோகிக்கிறார்கள். உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை டைம் பத்திரிக்கை 2014-ம் ஆண்டு தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    பத்மஶ்ரீ விருது

    பத்மஶ்ரீ விருது

    அருணாசலம் முருகானந்தம் அவர்களின் செயற்கரிய செயலுக்காக அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை வழங்கியுள்ளது. இவரது புகழ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இவரது செயலும் வாழ்க்கைக் கதையும் தான் 'பேட்மேன்' என்ற பெயரில் அக்‌ஷய் குமார் நடிக்க பாலிவுட்டில் படமாகி இருக்கிறது.

    பேட்மேன் சேலஞ்ச்

    பேட்மேன் சேலஞ்ச்

    நாளை நாடு முழுவதும் வெளியாகவிருக்கும் 'பேட் மேன்' படத்திற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் அருணாசலம் முருகானந்தம் தொடங்கிவைத்த #Padman challenge சமூக வலைதளங்களில் செம ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

    பேடுமேன்

    பேடுமேன்

    இந்தப் படம் நாட்டு மக்கள் மத்தியில் ஓரளவுக்காவது நாப்கின்கள் பற்றிய புரிதலையும்,விழிப்புணர்வையும் ஏற்படுத்தினால் அதுதான் அருணாசலம் முருகானந்தம் அவர்களின் வெற்றி. கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட திரையுலகம் இந்த சேலஞ்சை விளம்பரத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளுமா பெண்களின் பிரச்னைகளைப் பேசுமா என்பதை யார் அறிவார்?

    English summary
    Akshay Kumar, Radhika Apte and Sonam Kapoor starred 'Pad Man' will be released tomorrow. Arunachalam Muruganantham is a social activist who produces napkins at low prices. Arunachalam Muruganantham's passion is Napkins revolution for women. His life was became cinema as 'Padman'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X