»   »  விளம்பரம் இல்லை... ஆனாலும் வேகமெடுக்கும் பத்மாவதி வசூல்!

விளம்பரம் இல்லை... ஆனாலும் வேகமெடுக்கும் பத்மாவதி வசூல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியில் சுமார் 180 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம் பத்மாவதி. இப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார்.

பத்மாவதி படம் மூலம் வரலாற்று மனிதர்களை திரையில் நிஜமாக நடமாட விட்டிருக்கிறார் பன்சாலி. இப்படத்தை வெளியிட இவர் சந்தித்த சட்ட போராட்டங்கள் சமீப காலத்தில் இந்திய சினிமாவில் எந்த படமும் சந்தித்தது இல்லை.

Padmavathi spinning huge money without publicity

உலகம் முழுவதும் பல மொழிகளில் ரிலீஸ் ஆன பத்மாவதி இந்தியாவில் வட இந்திய மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதியில் இன்றுவரை வெளியிட முடியவில்லை.

உலகம் முழுவதும் பத்மாவதி திரையிட்டட தியேட்டர்களில் குடும்பங்கள் குவிந்து பண மழை பொழிந்து முதல் வாரத்திலேயே முதலீட்டை வசூல் செய்து லாபகரமான படமாக பாக்ஸ் ஆபீஸ்ல் இடம் பிடித்திருக்கிறது 'பத்மாவதி'.

வழக்கம் போல் தமிழ் படங்கள்

கடந்த வாரம் (26.01.2017) மூன்று தமிழ் படங்களும் ஒரு டப்பிங் படமும் ரீலீஸ் ஆகின. பத்மாவதி குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. குறிப்பாக சென்னை, புறநகர், கோவை ஏரியா ஆகிய பகுதிகளில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக கடந்த ஏழு நாட்களாக ஓடியுள்ளது பத்மாவதி.

தமிழ் நாட்டில் அதிகமான திரைகளை ஆக்கிரமித்த நிமிர், மன்னர் வகையறா, பாகுமதி படங்கள் வசூல் செய்த மொத்த தொகையை விட, குறைவான திரைகளில் வெளியான பத்மாவதிக்கு வசூலான தொகை அதிகம்.

முதல் வாரம் 10 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆன பத்மாவதி, இரண்டாவது வாரம் திரையிட்ட தியேட்டர்களில் தொடர்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் நேற்று முதல் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு வழக்கமாக பத்திரிகை, தொலைக்காட்சி, இணைய தளங்களில் விளம்பரங்கள், கொடுக்கப்படும். பத்மாவதி படத்திற்கு இதுபோன்று எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை

திரையரங்குகளுக்கு விநியோகஸ்தர்கள் வழங்கும் விளம்பர போஸ்டர்கள் கூட குறைவான எண்ணிக்கையில் கொடுத்து பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டாம் எனக் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பத்மாவதி தடை செய்யப்படும் வாய்ப்பு இருப்பதால் விளம்பரங்களில் அதிக முதலீடு தேவையில்லை என்று தயாரிப்பாளர் தரப்பு தமிழக . விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தினசரிகளில் எந்த தியேட்டரில் பத்மாவதி ஓடுகிறது என்ற விளம்பரம் இல்லாமலே தியேட்டர்களில் குடும்பங்கள் குவிவதை கண்டு கோடம்பாக்க சினிமாக்காரர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

English summary
The Tamil version of Sanjay Leela Bansali's Padmavathi is collecting huge money than any other direct Tamil movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil