twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிரட்டலுக்கு அஞ்சுகிறதா சென்சார் போர்டு..? - 'பத்மாவதி' விண்ணப்பத்தை ஏற்கவில்லை!

    By Vignesh Selvaraj
    |

    மும்பை : பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர் ஆகியோர் நடித்த 'பத்மாவதி' படத்திற்கு ராஜபுத்திர வம்சத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    சித்தூர் மகாராணி பத்மாவதி பற்றி இந்தப் படம் தவறாகச் சித்தரிப்பதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். படத்தை வெளியிடக்கூடாது என படக்குழுவிற்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.

    'பத்மாவதி' படம் டிசம்பர் 1 அன்று வெளிவருவதை யாரும் தடுக்க முடியாது எனக் கூறிய தீபிகாவுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவரது தலையை வெட்டிக் கொண்டுவந்தால் ரு/5 கோடி பரிசு என அறிவித்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    பலத்த எதிர்ப்பு

    பலத்த எதிர்ப்பு

    வட மாநிலங்களில் பல அமைப்புகள் 'பத்மாவதி' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 'பத்மாவதி' படத்தில் ராஜபுத்திர சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என ஒரு அமைப்பினர் நீதிமன்றத்தில் தடை கோரினர். தடை விதிக்கமுடியாது எனத் தீர்ப்பு வெளியான நிலையில் அந்தச் சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பலத்த பாதுகாப்பு

    பலத்த பாதுகாப்பு

    'பத்மாவதி' விவகாரத்தால் தீபிகாவிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக தீபிகா படுகோனேவின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீபிகாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் பாலிவுட் திரையுலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்சார் போர்டு சிக்கல்

    சென்சார் போர்டு சிக்கல்

    இந்த நிலையில் படத்தைப் பார்த்துவிட்டு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தருவதாக ஒப்புக் கொண்டிருந்த தணிக்கைக் குழு, திடீரென அதிலிருந்து பின்வாங்கி உள்ளது. தணிக்கை குழுவிற்கு அனுப்பிய விண்ணப்பம் நிறைவாக இல்லை, குறைகள் இருக்கிறது என்று கூறி விண்ணப்பத்தை திருப்பி அனுப்பி உள்ளது.

    விண்ணப்பத்தை ஏற்கவில்லை

    விண்ணப்பத்தை ஏற்கவில்லை

    படக்குழுவின் விண்ணப்பத்தில் என்ன குறை என்று சென்சார் போர்டு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. நாடு முழுவதும் எழுந்து வரும் எதிர்ப்பு காரணமாக விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. போராட்டங்களுக்கு பயந்து சென்சார் போர்டு பின்வாங்குவதாகக் கூறப்படுகிறது.

    திட்டமிட்டபடி வெளியாகும்

    திட்டமிட்டபடி வெளியாகும்

    இந்த சிக்கல் குறித்து படத்தின் தயாரிப்பு நிர்வாகி அஜித் ஆந்த்தே கூறியதாவது, 'தணிக்கைக் குழு விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது உண்மைதான். குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிப்போம். படத்துக்கு எதிராக நடந்து வரும் பிரச்னைகளுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. திட்டமிட்டபடி படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்தார்.

    English summary
    The censor board has been sent back 'Padmavati' team's appliction. The application sent to the censor Committee has not been completed and has sent the application back to the claim.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X