twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யார் இவங்க, ஏன் இப்படி பண்றாங்க, ஆக்ஷன் எடுங்க: ஸ்மிருதி இரானியிடம் தீபிகா புகார்

    By Siva
    |

    மும்பை: பத்மாவதி ரங்கோலியை சிலர் அழித்து நாசப்படுத்தியதை பார்த்த தீபிகா படுகோனே கோபம் அடைந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் உதவி கேட்டுள்ளார்.

    ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்று படமான பத்மாவதியில் பத்மாவதியாக நடித்துள்ளார் தீபிகா படுகோனே. ராணி பத்மினியை அவமதிப்பதாகக் கூறி ஒரு அமைப்பு செட்டை நாசமாக்கி இயக்குனர் பன்சாலியை தாக்கியது.

    இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் கலைஞர் ஒருவர் தீபிகாவின் பத்மாவதி கெட்டப்பை ரங்கோலியாக வரைந்தார்.

    நாசம்

    பத்மாவதி ரங்கோலி சர்ச்சை. நான் 48 மணிநேரம் வரைந்த ரங்கோலியை 100 பேர் கொண்ட கும்பல் ஜெய் ஸ்ரீராம் என்று கூறி நாசமாக்கிவிட்டது. அதிர்ச்சி என்று ரங்கோலியை வரைந்த கரண் புகைப்படங்களுடன் ட்வீட்டினார்.

    கோபம்

    கலைஞர் கரண் மற்றும் அவரின் படைப்பு தாக்கப்பட்டது இதயத்தை நொறுக்குகிறது என்று தீபிகா படுகோனே ட்வீட்டியுள்ளார்.

    பொறுப்பு

    யார் இவர்கள்? இதற்கு யார் காரணம்? இன்னும் எவ்வளவு நாள் இது போன்றவைகளை நடக்க அனுமதிப்பது? என்று தீபிகா கேட்டுள்ளார்.

    நடவடிக்கை

    இதை உடனே நிறுத்த வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ட்வீட்டி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை டேக் செய்துள்ளார் தீபிகா.

    English summary
    Bollywood actress Deepika Padukone is angry after seeing some group vandalizing Padmavati Rangoli. She has requested minister Smriti Iran to take action.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X