»   »  சர்ச்சை எதிரொலி.. பத்மாவதி படம் வெளியிடும் தேதி தள்ளிவைப்பு

சர்ச்சை எதிரொலி.. பத்மாவதி படம் வெளியிடும் தேதி தள்ளிவைப்பு

By: Shyamsundar
Subscribe to Oneindia Tamil

மும்பை: தொடர் சர்ச்சைகளை அடுத்து பத்மாவதி படம் வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்த வரலாற்றுத் திரைப்படமான பத்மாவதிக்கு பெரிய எதிர்ப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தானின் சித்தூர் அரசி பத்மாவதி குறித்த வரலாற்றுப் படம் என்பதால் ராஜஸ்தானை சேர்ந்த பாஜக கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்

Padmavati release has postponed due to controversies.

இந்தப்படம் வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி ராஜ்புத் கார்னி சேவா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. மேலும் அந்த படத்த்தின் போஸ்டர்கள் கூட தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இந்தப்படம் திட்டமிடப்பட்டுள்ள டிசம்பர் 1ம் தேதி வெளியானால் மாநிலத்தில் பெரும் போராட்டம் உருவாக வாய்ப்பு இருப்பதாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்ட்டு இருக்கிறது. படம் கண்டிப்பாக டிசம்பர் 1ம் தேதி வெளியாகாது என்று படக்குழு கூறியுள்ளது. வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

English summary
The release of Sanjay Leela Bhansali's 'Padmavati' has been postponed. Padmavati, will not release on its scheduled date on December 1 due to controversies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil