»   »  பாஜக எதிர்ப்பால் பத்மாவதி படம் தள்ளி வைப்பு!

பாஜக எதிர்ப்பால் பத்மாவதி படம் தள்ளி வைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பத்மாவதி படத்துக்கு தொடர்ந்து பாஜகவினர் கடுமையாக எதிர்த்து வருவதால் டிசம்பர் 1-ம் தேதி அந்தப் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள படம் பத்மாவதி. இந்தப் படத்தில் ராஜஸ்தானின் மேவார் பகுதியை ஆண்ட ராணி பத்மாவதியை தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி பாஜக, இந்துத்துவா அமைப்புகள் படத்துக்கு கடுமையான எதிர்ப்பாக் காட்டி வருகின்றன.

Padmavati release postponed

உபி அரசு அதிகாரப்பூர்வமாகவே இந்தப் படத்தை திரையிட விட மாட்டோம் என அறிவித்துள்ளது.

சென்சார் குழு படத்துக்கு முதலில் யுஏ சான்று வழங்குவதாகக் கூறியது. ஆனால் இப்போது சான்று வழங்க முடியாது என மறுத்துள்ளது. விண்ணப்பத்தில் குறைகள் உள்ளன, சரியாக செய்து மீண்டும் விண்ணப்பியுங்கள் என்று கூறியுள்ளது.

இப்படி பல்வேறு பக்கங்களிலிருந்தும் நெருக்கடிகள், பிரச்சினைகள் வந்துள்ளதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படத்தைத் தயாரித்துள்ள வயாகாம் 18 அறிவித்துள்ளது.

ரூ 190 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள படம் பத்மாவதி. ரிலீஸ் தேதி தள்ளிப் போவதால், தயாரிப்பாளருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
The Producers of Padmavati has announced that the movie release has been postponed from Dec 1st due to many reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil