»   »  பாகுபலி 2 சாதனையை முறியடித்த பத்மாவதி ட்ரெய்லர்: வாங்குன அடியை மறந்து மகிழ்ந்த இயக்குனர்

பாகுபலி 2 சாதனையை முறியடித்த பத்மாவதி ட்ரெய்லர்: வாங்குன அடியை மறந்து மகிழ்ந்த இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பத்மாவதி பட ட்ரெய்லர் பிரபாஸின் பாகுபலி 2 ட்ரெய்லரின் சாதனையை முறியடித்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்துள்ள பிரமாண்ட வரலாற்று படம் பத்மாவதி. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

ட்ரெய்லரில் ரன்வீர் சிங்கை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

ட்ரெய்லர்

ட்ரெய்லர்

பத்மாவதி ட்ரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் அதை 15 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். பாகுபலி 2 ட்ரெயல்ரை 24 மணிநேரத்தில் 11 மில்லியன் பேர் பார்த்தனர்.

சாதனை

சாதனை

பத்மாவதி ட்ரெய்லர் பாகுபலி 2 படத்தின் ட்ரெய்லர் சாதனையை முறியடித்துள்ளது. பத்மாவதி படம் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது.

பன்சாலி

பன்சாலி

ராணி பத்மினியை படத்தில் அவமதிப்பதாகக் கூறி கர்ணி சேனா ஆட்கள் ஜெய்பூரில் பத்மாவதி பட ஷூட்டிங் நடந்த இடத்திற்கு வந்து செட்டை நாசம் செய்தனர். மேலும் பன்சாலியையும் அடித்தனர்.

அலாவுத்தீன்

அலாவுத்தீன்

மன்னர் அலாவுத்தீன் கில்ஜிக்கும், ராணி பத்மினிக்கும் இடையே காதல் காட்சிகள் இருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு கர்ணி சேனா ஆட்கள் பன்சாலியை தாக்கினர்.

English summary
Sanjay Leela Bhansali's Padmavati trailer has broken the record of SS Rajamouli's Baahubali 2 trailer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil