»   »  'மெர்சல்' டீசர் சாதனையை தூக்கிச் சாப்பிட்ட 'பத்மாவதி' ட்ரெய்லர்!

'மெர்சல்' டீசர் சாதனையை தூக்கிச் சாப்பிட்ட 'பத்மாவதி' ட்ரெய்லர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : சரித்திரப் படமாக உருவாகி வரும் 'பத்மாவதி' படத்தில் ரன்வீர் சிங், சாஹித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் 'பத்மாவதி' படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக்கும் தனித்தனியாக வெளியிடப்பட்டு வந்தன.

'பத்மாவதி' படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க, வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

'பத்மாவதி' படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தனித்தனியாக வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நெகட்டிவ் ரோல்

நெகட்டிவ் ரோல்

ரன்வீர் சிங், சுல்தான் அலாவுதின் கில்ஜி வேடத்தில் 'பத்மாவதி' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ரன்வீர், நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரமாண்ட மேக்கிங்

பிரமாண்ட மேக்கிங்

இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாகுபலியைப் போல போர்க் காட்சிகள், அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டுப் படமாக்கப்பட்டிருக்கிறது.

ட்ரெய்லர் சாதனை

ட்ரெய்லர் சாதனை

'பத்மாவதி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மிக வைரலான இந்த ட்ரெய்லரை யூ-ட்யூப் தளத்தில் ஒரே நாளில் 15 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். பாலிவுட் வரலாற்றில் 24 மணி நேரத்தில் இதுவே அதிகபட்சம் என படக்குழு தெரிவித்துள்ளது.

மெர்சல் டீசர் வியூவ்ஸ்

மெர்சல் டீசர் வியூவ்ஸ்

விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் டீசர் வெளிவந்து பல சாதனைகளைப் படைத்தது. மெர்சல் டீசரை ஒரு நாளில் 11 மில்லியன் பேர் பார்த்திருந்தனர். அந்தச் சாதனையை எல்லாம் ஆரவாரமில்லாமல் தூக்கிச் சாப்பிட்டு விட்டது 'பத்மாவதி' ட்ரெய்லர். 'மெர்சல்' ட்ரெய்லர் இந்தச் சாதனையை முறியடிக்குமா எனப் பார்க்கலாம்.

நன்றி தெரிவித்த ரன்வீர் சிங்

'பத்மாவதி' படத்திற்கு கிடைத்த இத்தகைய வரவேற்பிற்கு நடிகர் ரன்வீர் சிங் ட்விட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் உழைப்பு நிச்சயம் வெற்றிபெறும் எனவும் கூறியுள்ளார்.

English summary
Ranveer Singh, Shahith Kapoor and Deepika Padukone are plays in 'Padmavati'. Ranveer Singh plays the role of Sultan Aladdin gilji in this film. The trailer of 'padmavati' has been released and breaks you tube records of bollywood film trailers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil