»   »  நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்

நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலிவுட் நடிகர் ஓம் பூரியை பிரதமர் நரேந்திர மோடி கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் டிவி சேனல் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஓம் பூரி கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார். வியாழக்கிழமை படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியவர் மறுநாள் காலை எழுந்திரிக்கவில்லை.

வீட்டில் அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காயம்

காயம்

ஓம் பூரியின் தலையில் இடது பக்கம் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாகிஸ்தான் டிவி

பாகிஸ்தான் டிவி

பாகிஸ்தானை சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு ஆதரவாக பேசியதால் ஓம் பூரியை பிரதமர் நரேந்திர மோடியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சேர்ந்து கொன்றுவிட்டதாக பாகிஸ்தானில் செயல்படும் போல் தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை

பிரேத பரிசோதனை அறிக்கை

போல் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறுகையில், எங்களிடம் ஓம் பூரியின் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளது. அதில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெளிவாக எழுதப்பட்டுள்ளது என்றார்.

சல்மான் கான்

சல்மான் கான்

மோடி அடுத்ததாக சல்மான் கான் மற்றும் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானை குறி வைத்துள்ளதாக போல் டிவி தெரிவித்துள்ளது. ஓம் பூரி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததால் கொலை செய்யப்பட்டார் என்கிறது அந்த டிவி.

ஓம் பூரி

ஓம் பூரி

யூரி தாக்குதலை அடுத்து பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள் பாலிவுட் படங்களில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியது. அப்போது ஓம் பூரி பாகிஸ்தான் கலைஞர்களுக்கு ஆதரவாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A television channel in Pakistan took things a bit too far to claim that the death of veteran actor Om Puri was plotted by Prime Minister, Narendra Modi and National Security Advisor, Ajit Doval.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil