twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷாருக்கிற்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லும் பாக். உள்துறை அமைச்சர்..

    By Siva
    |

    மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். இது இவருக்குத் தேவையில்லாத வேலை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நாட்டில் உள்ள மக்களுக்கே பாதுகாப்பு அளிக்க முடியாதவர் அடுத்த நாட்டின் விவகாரத்தில் தலையிடுவது கண்டனக்குரிய ஒன்று.

    இது குறித்து மாலிக் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார்.

    ஷாருக்கிற்கு பாதுகாப்பு கொடுங்க ப்ளீஸ்:

    ஷாருக்கிற்கு பாதுகாப்பு கொடுங்க ப்ளீஸ்:

    மாலிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஷாருக்கான் இந்தியராகப் பிறந்தவர். இந்தியராகவே இருக்க விரும்புபவர். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு நான் இந்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். ஷாருக்கானுக்கு எதிராக பேசும் இந்திய சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள். அவர் ஒரு சினிமா நடிகர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவரை பாகிஸ்தான் மற்றும் இந்திய மக்கள் அதிகமாக நேசிக்கின்றனர். அப்படி இருக்கையில் எதற்கு வெறுப்பு என்றார்.

    அரசியல் தலைவர்களுக்கு நான் தான் கிடைத்தேனா?

    அரசியல் தலைவர்களுக்கு நான் தான் கிடைத்தேனா?

    இது குறித்து ஷாருக் கூறுகையில், இந்தியாவில் முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகளுக்கு அரசியல் தலைவர்கள் சில சமயம் என்னை ஒரு சின்னமாக ஆக்கிவிடுகின்றனர். நான் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருப்பதாக சில சமயங்களில் என் மீது குற்றம் சுமத்தினர். இத்தனைக்கும் நான் ஒரு இந்தியன், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர் என் தந்தை. என்னை என் தாய்நாட்டை விட்டுவிட்டு 'என் தாய்நாடு' என்று அவர்கள் கருதும் நாட்டுக்கு என்னை போகச் சொல்லி தலைவர்கள் பேரணிகள் நடத்தினர் என்றார்.

    படத்திற்கு பெயர் மை நேம் இஸ் கான் ஏன்?

    படத்திற்கு பெயர் மை நேம் இஸ் கான் ஏன்?

    யாரோ ஒரு தீவிரவாதியின் கடைசி பெயரும் என்னுடைய கடைசி பெயரும் ஒன்றாக இருக்கிறது என்பதற்காக என்னை பலமுறை தவறாக சித்தரித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு புரிய வைக்கவே என் படத்திற்கு 'மை நேம் இஸ் கான் (அண்ட் ஐயம் நாட் என டெரரிஸ்ட்)' என்று பெயர் வைத்தேன். அப்படத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கச் சென்றபோது என்னை அந்நாட்டு விமான நிலையத்தில் பிடித்து வைத்து கான் என்ற என் பெயருக்காக என்னிடம் பல மணிநேரம் விசாரித்தனர் என்றார் ஷாருக்.

    English summary
    Pakistan interior minister Rehman Malik has requested Indian government to provide security to Bollywood star Shah Rukh Khan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X