பாகிஸ்தான் ரசிகர்களையும் கவர்ந்த பாட்ஷா.. ஜப்பான் ரசிகர்களுக்கு டஃப் போட்டி கொடுப்பாங்க போல!

சென்னை: இந்திய நடிகர்களிலேயே உலகளவில் அதிக ரசிகர்கள் கொண்டவர் என்றால் அது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

பாலிவுட்டின் டாப் ஹீரோ ஷாருக்கான் முதல் பிரம்மாஸ்திரம் நாயகன் ரன்பீர் கபூர் வரை ரஜினிகாந்தின் புகழை பல இடங்களில் பாடி உள்ளனர்.

பாகிஸ்தானிடம் தோற்றுப் போய்விட்டதே இந்தியா என புலம்பும் ரசிகர்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ரசிகர்கள் மனங்களையும் வென்ற ரஜினிகாந்தின் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

விளையாட்டில் அதெல்லாம் சகஜமப்பா

விளையாட்டில் அதெல்லாம் சகஜமப்பா

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதும் ஒட்டுமொத்த இந்தியர்களும் கொண்டாட்டத்தில் மிதந்தனர். அதே நேரம் சமீபத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய நிலையில், வீரர்களை ரசிகர்கள் கரிச்சுக் கொட்டி வருகின்றனர். அரசியலில் மட்டுமல்ல விளையாட்டிலும் வெற்றி தோல்வி சகஜம் தான்.

தமிழ் படங்கள் பார்க்கும் பாகிஸ்தானியர்கள்

தமிழ் படங்கள் பார்க்கும் பாகிஸ்தானியர்கள்

தமிழ்நாட்டில் எந்த ரசிகரிடமாவது மைக்கை நீட்டி பாகிஸ்தான் படங்கள் பார்ப்பீர்களா? என்றால் அடித்து ஓட விட்டு விடுவார்கள். ஒரு படத்தின் பெயரையோ, ஒரு நடிகரின் பெயரையோ கூட சரியாக சொல்ல மாட்டார்கள். ஆனால், அதே நேரத்தில் பாகிஸ்தானியர்களிடம் மைக்கை நீட்டி தமிழ்ப் படம் பார்ப்பீர்களா என யூடியூப் சேனல் ஒன்று கேட்டதற்கு, பார்ப்போம் என அவர்கள் அளித்த பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரஜினிகாந்த் பிடிக்கும்

ரஜினிகாந்த் பிடிக்கும்

அதிலும், நடிகர் ரஜினிகாந்த் படங்களை பார்ப்போம் என புன்னகையுடன் பதில் அளித்துள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது. சிவாஜி தி பாஸ், ரஜினிகாந்த், சூப்பர்ஸ்டார் என ஒவ்வொரு பாகிஸ்தானிய ரசிகர்களும் ரஜினிகாந்தின் புகழ் பாடும் அந்த வீடியோவை பார்ப்பதற்கே பெருமையாக இருக்கு என ரஜினி ரசிகர்கள் ட்வீட் போட்டு அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

ஜப்பானியர்களுக்கே போட்டி

ஜப்பானியர்களுக்கே போட்டி

இந்தியாவை தாண்டி உலகின் பல நாடுகளிலும் ரஜினிக்கு ரசிகர்கள் இருந்தாலும், ஜப்பானிய மக்கள் மத்தியில் ரஜினிக்கு தனி இடம் உண்டு. இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் பாட்ஷாவை இப்படி பாராட்டுவதை பார்த்தால், ஜப்பான் ரசிகர்களுக்கே டஃப் கொடுப்பார்கள் போல இருக்கே என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

ஜெயிலர் தெறிக்கும்

ஜெயிலர் தெறிக்கும்

தர்பார், அண்ணாத்த என தொடர்ந்து ரஜினிகாந்தின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜெயிலர் விநாயகர் சிலைகள் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி - கமல்

ரஜினி - கமல்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஒரே மேடையில் கலந்து கொண்டு பேசப் போவதை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X