»   »  பாகிஸ்தானில் தனியார் பார்ட்டிக்கு வர மறுத்த நடிகை சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் தனியார் பார்ட்டிக்கு வர மறுத்த நடிகை சுட்டுக் கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தனியார் பார்ட்டியில் கலந்து கொள்ள மறுத்த நடிகை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் கைபர் படுங்க்வா மாகாணத்தில் உள்ள மர்தானை சேர்ந்தவர் சும்பல் கான்(25). மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் திறமையான பாடகியும் கூட.

இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் 3 பேர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

கொலை

கொலை

சும்பலின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் அவரை தனியார் பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரத்தில் அவரை பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 தாத்தா

தாத்தா

3 பேர் கண்மூடித்தனமாக சுட்டதில் சும்பல் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் சும்பலின் தாத்தா மிர் பகதூரின் கண் முன்னால் நடந்துள்ளது.

 கைது

கைது

சும்பல் கானை கொலை செய்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி நயீம் கட்டாக்கை கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

 கிஸ்மத் பைக்

கிஸ்மத் பைக்

முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் லாகூரில் மேடை நாடக நடிகை கிஸ்மத் பைக் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிய அவர் கொலை செய்யப்பட்டார்.

English summary
A Pashto theatre actress was shot by three gunmen after she refused to go with them for a private event in Pakistan’s Khyber Pakhtunkhwa province, police said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil