»   »  வேதாளமாக நடிக்கவிருக்கும் கின்னஸ் நடிகர்!

வேதாளமாக நடிக்கவிருக்கும் கின்னஸ் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : குருராஜா என்பவரின் இயக்கத்தில் 'உப்பு புளி காரம்' எனும் படம் தயாராகவிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் சில ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள காமெடி நடிகர் பக்ரு தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இவர் தமிழில் 'டிஷ்யூம்', 'அற்புதத்தீவு' படங்களில் நடித்தவர்.

இந்தப் படத்தில் மலையாள நடிகர் டினி டாம் ஹீரோவாகவும், வங்காள நடிகை பவுலமி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இந்தப் படம் வேதாளம், விக்கிரமாதித்யன் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

Pakru back in tamil film

வேதாளம் கதை சொல்லிக் கேள்வி கேட்பதும், அதற்கு விக்ரமாதித்யன் பதில் சொல்வதுமாக கதை நீளும். வேதாளம் சொல்லும் கதை இந்தக் காலத்துக் கதை. அதில்தான் நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கிறார்கள். இதில் வேதாளமாக நடிகர் பக்ரு நடிக்கிறார்.

இவர் 'குட்டியும் கோலும்' எனும் மலையாளப் படத்தை இயக்கி உலகிலேயே குள்ளமான இயக்குநர் எனும் சாதனையையும் படைத்தார். அந்தப் படம் 'சக்தி விநாயகம்' எனும் பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakru acts in an upcoming tamil movie titled 'Uppu puli kaaram'. This film is based on Vikramadhityan vedhalam story.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil