twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தப் பக்கம் கண்ணதாசன்.. அந்தப்பக்கம் காமத்துப் பால்.. லாக்டவுனில் பாடலாசிரியர் பழநிபாரதி தீவிரம்!

    By
    |

    சென்னை: கவிஞர் கண்ணதாசன் மற்றும் காமத்துப்பால் பற்றி எழுதி வருவதாகச் சொன்னார், பாடலாசிரியர் பழநிபாரதி.

    லாக் டவுனால் மூடிக்கிடக்கிறது நாடு. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ், மற்ற நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாளைக்கு சியான் விக்ரம் பர்த்டே.. காமன் டிபியை வெளியிட்ட கோப்ரா இயக்குநர்.. தெறிக்கவிடும் ஃபேன்ஸ்!நாளைக்கு சியான் விக்ரம் பர்த்டே.. காமன் டிபியை வெளியிட்ட கோப்ரா இயக்குநர்.. தெறிக்கவிடும் ஃபேன்ஸ்!

     உலக நாடுகள்

    உலக நாடுகள்

    அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதை தடுக்க உலக நாடுகள் தீவிரமாகப் போராடி வருகின்றன. இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால், 12,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.

    படப்பிடிப்பு இல்லை

    படப்பிடிப்பு இல்லை

    மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவு என்றாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. படப்பிடிப்புகள் இல்லை என்பதால், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சில நடிகர், நடிகைகள் தாங்கள் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றனர்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    இந்நிலையில், பாடலாசிரியர் பழநிபாரதியிடம் இந்த லாக்டவுன் நேரத்தில் என்ன செய்கிறீர்கள்? என்று விசாரித்தோம். அவர் கூறும்போது, 'இந்த லாக்டவுன் எதிர்பாராதது. கொரோனாவை கட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழியும் இல்லை. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டிய நிலை. இந்த நேரத்தை நான், என் குடும்பத்துடன் செலவழிக்கப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    எனக்குள் பாதிப்பை ஏற்படுத்திய கவிஞர் கண்ணதாசனின் காதல், தத்துவங்கள், சோகம் உள்ளிட்ட விஷயங்களை கொண்டு, கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எப்படி கவிஞரை பார்க்கிறேன் என்பது போல இந்தக் கவிதைகள் இருக்கும். அவரையும் என்னையும் இணைக்கும் வித்தியாசமான முயற்சி இது. இதற்கான வேலைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.

    காமத்துப்பால்

    காமத்துப்பால்

    அடுத்து, திருக்குறளில் உள்ள காமத்துப் பாலுக்கு கவிதை நடையில் விளக்கம் எழுதி வருகிறேன். காமத்துப்பாலுக்கு கண்ணதாசன் உட்பட பலர் விளக்க உரை எழுதி இருந்தாலும் இது, அதுபோல் இருக்காது. நான் எழுதுவது வேறு மாதிரியாக இருக்கும். இந்த இரண்டும் தவிர சில கட்டுரை தொகுதிக்கான வேலைகளையும் செய்து வருகிறேன்' என்றார்.

    English summary
    Palani bharathi is writing a book about Kannadasan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X