»   »  பாஸ், நீங்க வெறும் வாலா இல்லை அனுமார் வாலா...?

பாஸ், நீங்க வெறும் வாலா இல்லை அனுமார் வாலா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாலுன்னு வச்சதுக்கு பதிலா பேசாம அனுமார் வாலுன்னு வச்சிருக்கலாம். இது சிம்புவின் படமான வாலுவிற்கு நெட்டிசன்கள் அடிக்கும் கமெண்ட்.

இப்படித்தான் சிம்பு நடித்த படங்கள் வெளியாவது சிந்துபாத் கதையாக நீள்கிறது. வாலு, இதுநம்ம ஆளு என இரு படங்களும் எப்போது ரிலீஸ் ஆகும் வேட்டை மன்னன் என்ற ஒரு படம் தொடங்கி என்ன ஆனது என்றே தெரியவில்லை.

இது இப்படி இருக்க கவுதம் மேனன் படத்தில் சற்றென்று மாறுது வானிலை என்ற படத்தில் ( இப்போது அச்சம் என்பது மடமையடா) நடிப்பதாக 2013ஆம் ஆண்டு தகவல் வெளியானது.

மராத்திய நாடக நடிகை

மராத்திய நாடக நடிகை

சிம்புவிற்கு ஜோடியாக மராத்திய நாடக நடிகை பல்லவி சுபாஷ் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் பட அறிவிப்பு வெளியான கையோடு அஜீத் படம் இயக்கப்போனார் கவுதம் மேனன். சிம்பு படம் நிறுத்தப்பட்டதால், பல்லவி சுபாஷ் கொடுத்த தேதிகள் வீணானது.

மறுபடியும் முதல்ல இருந்து

மறுபடியும் முதல்ல இருந்து

அஜீத் படத்தை முடித்துவிட்டு வந்த கவுதம் மேனன், மீண்டும் சிம்பு படத்தை தொடங்கினார். பல்லவி சுபாஷிடம் தேதிகள் கேட்டபோது, நாடகங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டதால் சிம்பு படத்துக்கு தேதிகள் ஒதுக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து படக்குழு, பல்லவி சுபாஷை படத்தில் இருந்து நீக்கியுள்ளது.

அவருக்கு பதில் யார்

அவருக்கு பதில் யார்

அதனைத் தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக பல்வேறு முன்னணி நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தேதிகள் பிரச்சினையால் யாருமே நடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது படக்குழு சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஒருவருக்கு வலை வீசி வருகிறது.

கிடைத்த வாய்ப்பு

கிடைத்த வாய்ப்பு

பல்லவி சுபாஷ், நிறைய விளம்பரப்படங்களில் நடித்திருப்பதுடன் மராத்திய மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார். ராஜீவ்மேனனின் விளம்பரப்படம் ஒன்றில் நடிக்கவந்தவரின் போட்டோ கௌதம் மேனனின் உதவி இயக்குனர் ஒருவர் கண்ணில்பட, கவுதமிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். அவரை அழைத்து டெஸ்ட் ஷுட் நடத்திய கவுதமுக்கு முழு திருப்தி ஏற்படவே சிம்புவிற்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

யாருமே வரலையே

யாருமே வரலையே

இந்தப்படத்தில் ரசிகர்களுக்கு அடையாளம் தெரிந்த நடிகையைத்தான் நடிக்கவைக்க விரும்பினேன். ஆனால் நான் கேட்கும் தேதிகளை அவர்களால் முழுமையாக கொடுக்க முடியவில்லை. அதனால் நடிக்கத்தெரிந்த, ஆனால் தமிழுக்கு புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தபோது பல்லவி கண்ணில் பட்டார். அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டோம்" என்று கூறினார் கவுதம் மேனன்.

தட்டிப்போன வாய்ப்பு

தட்டிப்போன வாய்ப்பு

பல்லவிக்கு மராத்தி தான் தாய்மொழி. ஏற்கனவே ஒரு தமிழ்ப்படத்தில் ஒப்பந்தமாகி இவர் நடித்த படம் என்ன காராணத்தினாலோ பாதியிலேயே நின்றுவிட்டது இப்போது கௌதம் மேனன் அறிமுகம் மற்றும் சிம்புவின் ஜோடி என அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்திருந்தார் பல்லவி. ஆனால் மீண்டும் அந்த வாய்ப்பு தட்டி போய்விட்டது என்பதுதான் சோகம். தமிழ் கூறும் நல் உலகம் அழகான நடிக்கத் தெரிந்த நடிகையை இழந்துவிட்டதே!

English summary
Ace director Gautham Menon chose Hindi TV actress Pallavi Subhash for Simbu’s film, Achcham Yenbathu Madamaiyada, and even shot with her for a few weeks. Now the news is that Pallavi is out of the film and has been replaced. Looks like this development happened nearly a month back.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil