»   »  தலைமை ஆசிரியர் புகழ் பாடும் 'பள்ளிப் பருவத்திலே'-படம் - வீடியோ

தலைமை ஆசிரியர் புகழ் பாடும் 'பள்ளிப் பருவத்திலே'-படம் - வீடியோ

By: Suganthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிப் பருவத்திலே திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இது ஒரு கிராமப் பள்ளியின் ஆசிரியர், தன்னிடம் படித்த மாணவர்களை உலகின் தலை சிறந்த மாணவர்களாக உருவாக்கியதைப் பற்றி பேசும் படம் என்று இந்த படத்தின் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறியுள்ளார்.

'பள்ளிப் பருவத்திலே' திரைப்படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என அதன் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறியுள்ளார். ஒரு தலைமை ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்களை படிப்பிலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்குகிறார்.

 palliparuvathile a film about headmaster

அவரிடம் படித்த அத்தனை மாணவர்களும் உலகம் முழுக்க சிறந்த நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளில் பதவி வகிக்கின்றனர். அதைப் பற்றி பேசும் படம்தான் பள்ளி பருவத்திலே.

இப்படத்தின் நாயகனாக இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நடித்துள்ளார். நாயகியாக வெண்பா நடித்துள்ளார். கவிஞர் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

English summary
Palli paruvaththile is a film about a head master who made his students very studious and sincere. And how they ruled the world. It is based on real story told its director Vasudev baskar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil