»   »  எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம்.. மகன்களிடம் ஸ்டிரிக்ட்டாக நடந்து கொள்ளும் பமீலா ஆண்டர்சன்

எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம்.. மகன்களிடம் ஸ்டிரிக்ட்டாக நடந்து கொள்ளும் பமீலா ஆண்டர்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பமீலா ஆண்டர்சன் என்றதுமே பே வாட்ச் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அன்று கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த பமீலா இன்று பொறுப்பான தாயாக கலக்குகிறார்.

ஒரு காலத்தில் இளைஞர் உலகை கலக்கிய கவர்ச்சிப் புயல் பமீலா. இவர் நடித்த பே வாட்ச் சீரியலுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். இன்றும் கூட பமீலா மீது பைத்தியமாக உள்ளோரும் உண்டு.

ஆனால் இன்று தனது இரு பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்க்கும் பொறுப்பான தாயாக வலம் வருகிறார் பமீலா.

2 மகன்கள்...

2 மகன்கள்...

பமீலாவின் கணவர் பெயர் டோமி லீ. இருவரும் 3 வருட திருமண வாழ்க்கைக்குப் பின்னர் 1998ம் ஆண்டுடன் பிரிந்து விட்டனர். அதன் பிறகு தனது இரு மகன்களையும் கண்ணும் கருத்துமாக வளர்க்க ஆரம்பித்தார் பமீலா.

அருமையான மகன்கள்...

அருமையான மகன்கள்...

தனது மகன்கள் குறித்து பமீலா கூறுகையில், " எனது வாழ்க்கை எப்படியோ. ஆனால் எனது பிள்ளைகள் இருவரும் அருமையானவர்களாக வளர்ந்துள்ளனர். அருமையாக வளர்த்துள்ளேன்.

நல்ல பழக்க வழக்கங்கள்...

நல்ல பழக்க வழக்கங்கள்...

எனது மூத்த மகன் பிரண்டனுக்கு 19 வயதாகிறது. இளையவன் டைலனுக்கு 17 வயதாகிறது. இருவரும் நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுங்கு ஆகியவற்றுடன் வளர்ந்துள்ளனர்.

எழுத்துபூர்வ ஒப்பந்தம்...

எழுத்துபூர்வ ஒப்பந்தம்...

எதைச் செய்தாலும் அதற்கு எழுத்துப்பூர்வமாக அவர்களுடன் நான் ஒப்பந்தம் போட்டே செய்கிறேன். அதுதான் அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கும் என்பதால் இப்படிச் செய்கிறேன்.

கார் ஒப்பந்தம்...

கார் ஒப்பந்தம்...

கார் வாங்கினால், குடித்து விட்டு வண்டி ஓட்ட மாட்டேன் என்று ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளேன். அதேபோல பெண்களை அவமதிக்கக் கூடாது என்றும் அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளேன்.

கலர்புல்லான வாழ்க்கை...

கலர்புல்லான வாழ்க்கை...

சிறந்த ரோல் மாடல்களாக அவர்களை வளர்த்துள்ளேனா என்று தெியாது. ஆனால் சிறந்தவர்களாக மாற்றியுள்ளேன். அவர்களது வாழ்க்கையையும் கலர்புல்லாக மாற்றியுள்ளேன்.

தாய்ப்பாசம்...

தாய்ப்பாசம்...

என் இரு பிள்ளைகளும் அருமையானவர்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தாய்ப் பாசம் பொங்கப் பேசுகிறார் பமீலா.

கண்டதும் காதல்...

கண்டதும் காதல்...

டோமி லீ குறித்துக் கூறுகையில், ‘அவரைப் பார்த்ததுமே காதல் கொண்டேன். கல்யாணமும் செய்தேன். அதே வேகத்தில்தான் இருவரும் பிரிந்தும் போனோம். அவரைச் சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அவரைப் பற்றி அறிந்தேன். அதே வேகத்தில் காதலும் கொண்டேன்' என்று கூறினார் பமீலா.

English summary
Actress Pamela Anderson says she is a strict parent who makes her sons "sign contracts" before letting them do anything.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil