கொரோனாவில் இருந்து மீண்ட பம்மல் கே சம்பந்தம் தாத்தா நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

சென்னை: பழம்பெரும் மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார். அவருக்கு வயது 98.

சமீபத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதிலிருந்து வெற்றிகரமாக மீண்ட நிலையில், இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

சந்திரமுகி, பம்மல் கே சம்பந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

உயில் தாத்தா

உயில் தாத்தா

கமல், சிம்ரன் நடிப்பில் வெளியான பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமலுக்கு தாத்தாவாக நடித்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி கடைசி வரை உயில் உயில் எனக் கூறி நடித்திருப்பார். அதே போல ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் உயில் உயில் எனக் கூறியே உயிரை விடும் தாத்தாவாக நடித்து இருப்பார் உன்னிகிருஷ்ணன்.

கொரோனாவுக்கு குட்பை

கொரோனாவுக்கு குட்பை

98 வயதான இரும்பு மனிதர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அதிலிருந்து தப்பித்த அவரை கொரோனா வைரஸ் தாக்கியது. சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றில் இருந்தும் பூரணமாக குணமானார்.

உடலை உருக்கி விடும்

உடலை உருக்கி விடும்

உடலில் வேறு ஏதாவது குறைபாடு இருந்து, கொரோனா தொற்று பரவினால், உடலை முழுவதுமாக அது உருக்கி விட்டுத் தான் செல்லும். எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலரும் கொரோனாவில் இருந்து மீண்ட பின்னரும் உயிரிழக்க இதுதான் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சிரிப்பு தாத்தா காலமானார்

சிரிப்பு தாத்தா காலமானார்

கல்யாணராமன் படத்தில் சிரிப்பு தாத்தாவாக புகழ்பெற்ற நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. சமீபத்தில் கொரோனாவை வென்றவர் என்று பலராலும் பாராட்டப்பெற்ற உன்னிகிருஷ்ணன் திடீரென உயிரிழந்த செய்தி சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X