twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்றும் நினைவில் நிற்கும் பஞ்சு அருணாசலம்... மறக்க முடியாத மணமகளே மருமகளே வா வா

    |

    சென்னை: மணமகளே மருமகளே வா வா என்ற மங்களகரமான பாடலை எழுதியவரும், ரஜினிக்கு முதன் முதலில் சில்வர் ஜூப்ளி படம் கொடுத்தவரும், நடிகர் ஜெய்சங்கருக்கு முரட்டுக்காளை படத்தின் மூலம் மறுவாழ்வு அளித்தவருமான தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தை நம்மால் மறக்க முடியாது.
    இன்று அவருடைய மூன்றாவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    கிட்டத்தட்ட 600 படங்களுக்குக் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர். கதாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், அதோடு சிறந்த இயக்குநரும் கூட, வெற்றிகரமான பல படங்களைத் தயாரித்திருக்கிறார். ஏராளமான பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதிலும் சாரதா படத்தில் இவர் எழுதிய மணமகளே மருமகளே வா வா என்ற பாடல், இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலிபரப்பப்படுகிறது.

    Panchu Arunachalams Third death anniversary

    ரஜினிகாந்த், கமல்ஹாஸன், எஸ்.பி. முத்துராமன் ஆகியோர்களுடன் கூட்டணி அமைத்துப் பஞ்சு அருணாசலம் எடுத்த படங்கள் இன்றும் மறக்கமுடியாதவை. ரஜினிகாந்த்துக்கு ஆரம்பகாலத்தில் வரிசையாக சூப்பர்ஹிட்களை அளித்தவர் இவர்தான். ப்ரியா தான் ரஜினிக்கு முதல் சில்வர் ஜூப்ளி படம். அதை எடுத்தது சாட்சாத் இவரே.

    கஸ்தூரி ஆட்டம் செம.. செம.. விடாம அடிங்க.. நெத்தியடி.. செருப்படி எல்லாமே! கஸ்தூரி ஆட்டம் செம.. செம.. விடாம அடிங்க.. நெத்தியடி.. செருப்படி எல்லாமே!

    ஜெய்சங்கருக்கு முரட்டுக்காளை படம் மூலமாக மறுவாழ்வு அளித்தவர். அது மட்டுமல்ல. இசைஞானி இளையராஜாவை தமிழ் திரையுலகுக்கு அளித்த பெருமையும் பஞ்சு அருணாசலத்தையே சேரும். அவர் எடுத்த அன்னக்கிளி படம் தமிழ்நாட்டில் எப்படி பிய்த்துக்கொண்டு பட்டிதொட்டியெங்கும் ஓடியது என்பது அக்காலத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

    அதிலும் கமர்ஷியல் படம் என்றால் அது எப்படி இருக்கவேண்டும் என்பதற்குப் பஞ்சு அருணாசலம் எழுதிய படங்களே மிகச்சிறந்த உதாரணங்களாக காட்டப்படுகின்றன. மிக எளிமையான கதை, அக்கதையில் ஒருசில திருப்பங்கள், அலுப்பே தட்டாத காட்சிகள், பாடல்கள், எல்லாமே சிறப்பாக முடித்து வைக்கப்படும் க்ளைமாக்ஸ் என்று அவரது படங்கள் அத்தனை தரப்பு ஆடியன்ஸையும் திருப்திபடுத்தின என்று சொன்னால் அது மிகையில்லை.

    மாஸ் ஆடியன்ஸுக்காக முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், எல்லாம் இன்பமயம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்கள் என்றால், க்ளாஸ் ஆடியன்ஸுக்காக புவனா ஒரு கேள்விக்குறி, அன்னக்கிளி, நதியைத் தேடிவந்த கடல் போன்ற படங்கள் உள்ளன.

    மாஸ் + க்ளாஸ் கலந்து உயர்ந்த உள்ளம், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் என்று பஞ்சு அருணாசலம் எழுதாத திரைக்கதைகளே இல்லை.
    பொதுவாக, திரைப்படங்களில் எழுத்தாளர்களாக இருப்பவர்களுக்கு சரக்கு விரைவில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை தமிழ்த் திரையுலகில் உண்டு. உலகம் முழுக்க மிகவும் வயதான இயக்குநர்களும் திரைக்கதை ஆசிரியர்களும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். இருந்தாலும் தமிழ்த் திரையுலகில் அப்படி நடப்பதில்லை (ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து).

    பஞ்சு அருணாசலம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையிலும் வற்றாத கற்பனைத்திறனைக் கொண்டிருந்தவர். அவரிடம் யாரும் சென்று ஆலோசனை கேட்கமுடியும். குறீப்பாக கமல்ஹாஸனுக்கு அவர் அளித்துள்ள ஆலோசனைகள் அளப்பரியவை என்று திரைவட்டாரங்கள் சொல்லும்.

    எப்படிப்பட்ட படத்தையும் பார்த்துவிட்டு, அப்படத்தின் பிரச்சனைகள், எப்படி எடிட் செய்யலாம், அப்படத்தை எப்படி சுவாரஸ்யமாக மாற்றலாம் என்றெல்லாம் பஞ்சு அருணாசலம் பலருக்கும் ஆலோசனைகள் வழங்குவதில் தேர்ந்தவர்.

    English summary
    Panchu Arunachalam, who passed away on August 9, 2016. the first song he wrote on his own was the popular Manamagale marumagale vaa vaa. Panchu Arunachalam was the one who gave Rajinikanth an early line of superhits. Priya is Rajni's first Silver Jubilee film. It was he who took it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X