»   »  'முத்துராமலிங்கம்' ஸ்பெஷல்... இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் எழுதிய பாடல்!

'முத்துராமலிங்கம்' ஸ்பெஷல்... இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் எழுதிய பாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையராஜா - பஞ்சு அருணாச்சலம்... நாற்பது ஆண்டுகளாய் திரையுலகில் வெற்றி வலம் வரும் இசைக் கூட்டணி இது.

இளையராஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த பஞ்சு அருணாச்சலம், அதன் பிறகு தனது படங்களுக்கு இளையராஜா அல்லது அவரது வாரிசுகளைத் தவிர வேறு எவரையும் நாடியதில்லை. இளையராஜாவின் வாரிசுகள் கார்த்திக், யுவனை அறிமுகம் செய்தவரும் பஞ்சு அருணாச்சலம்தான்.

Panchu Arunachalam writes lyrics after 21 years

இளையராஜா - பஞ்சு அருணாச்சலம் கூட்டணியில் எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்துள்ளன. ஆனால் பஞ்சு அருணாச்சலம் உடல் நிலை அவரை தொடர்ந்து எழுத விடாமல் செய்துவிட்டது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் இளையராஜா இசையில் பாடல் எழுதியுள்ளார். அதுதான் முத்துராமலிங்கம் படம். இந்தப் படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதுகிறார் பஞ்சு அருணாச்சலம்.

Panchu Arunachalam writes lyrics after 21 years

படத்தின் அனைத்து பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.

கவுதம் கார்த்திக், கேத்ரின் த்ரேசா நடிக்கும் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர். குளோபல் மீடியா ஒர்க்ஸ் டி விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு யுகே செந்தில்குமார். இப்படத்தின் நிர்வாக மேற்பார்வை கமுதி ஏ.செல்வம்.

நடிகர் முத்துராமனுடன் 'காற்றினிலே ஒரு கீதம்', 'மயங்கினாள் ஒரு மாது', நடிகர் கார்த்திக்குடன் 'சின்ன கண்ணம்மா' 'என் ஜீவன் பாடுது' படங்களில் பணியாற்றிய பஞ்சு அருணாச்சலம், முத்துராமனின் பேரனும், கார்த்திக்கின் மகனுமான கவுதம் கார்த்திக்குடன் பணியாற்றுவகு குறிப்பிடத்தக்கது.

English summary
After a gap of 21 years veteran film maker Panchu Arunachalam is working with Ilaiyaraaja in Muthuramalingam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil