»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

படத் தயாரிப்பாளர் ஜி.வியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த கந்து வட்டி தாதா அன்புச்செழியனுக்குஆதரவாக பேட்டி கொடுத்த தயாரிப்பாளர், கதையாசியர் பஞ்சு அருணாச்சலத்திற்கு தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இனி இவரது படத் தயாரிப்புப் பணிகளுக்கு எந்த ஒத்துழைப்பும் தருவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகத்தையே உலுக்கிய ஜி.வியின் தற்கொலைக்கு பின்னணியில் கந்து வட்டி தாதாவானஅன்புச்செழியன் இருந்தது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

ஆனால், ஜி.வியின் மரணம் நடந்த மறுநாளே திடீரென பத்திரிக்கையாளர்களை அழைத்த பஞ்சு அருணாச்சலம்,ஜி.வியின் தற்கொலைக்கு அன்புச் செழியன் காரணமல்ல, அவர் ஜி.வியை மிரட்டவும் இல்லை, செழியன் ரொம்பநல்லவர். கடன் தொல்லை காரணமாக ஜி.வி. இறக்கவில்லை. வீட்டுப் பிரச்சனை தான் காரணமாக இருக்கலாம்என்று தானாகவே முன் வந்து பேட்டியளித்தார்.

ஜி.வியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பஞ்சுவின் இந்தப் பேட்டி திரையுலகினரை பெரும்அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சக தயாரிப்பாளர் இறந்ததற்கான காரணத்தை திரையுலகில் அனைவரும் முழுவதுமாக அறிந்திருக்கும் நிலையில்,பஞ்சு இப்படி பேட்டி கொடுத்தது பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

அன்புச் செழியனிடம் பஞ்சு அருணாச்சலமும் பெரும் தொகையை கடனாக வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அவர்தான் ஜி.விக்கும் பணம் வாங்கித் தந்தார். இதனால், அவரை வைத்தே தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ளஅன்புச்செழியன் முயன்றார்.

ஆளும் கட்சியின் மன்னார்குடி கும்பலின் பினாமியாகவே கருதப்படும் அன்புச் செழியன், பஞ்சுவை மிரட்டியேஇப்படி பேட்டி அளிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

பஞ்சுவின் பேட்டியால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அவசரமாகக் கூடி விவாதித்தனர்.கூட்டத்திற்கு சங்கத் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள பஞ்சுஅருணாச்சலம், சங்கத்தின் அனுமதியைக் கோராமல், பத்திகைகளுக்கு பேட்டி கொடுத்தது தவறு. அதற்காக பஞ்சுஅருணாச்சலத்திற்கு சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பஞ்சு அருணாச்சலத்தைப் புறக்கணிப்பது என சங்கம் முடிவு செய்கிறது. அவரை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும்நிகழ்ச்சிகளுக்கு யாரும் செல்வதில்லை, சங்கத்தின் நிகழ்ச்சிகள் எதற்கும் இனி பஞ்சுவை அழைப்பதில்லை என்றுமுடிவு செய்யப்பட்டது.

அன்புச்செழியனிடம் தான் மாட்டிக் கொண்டதை பல சக தயாரிப்பாளர்களிடம் ஜி.வியே வாய் திறந்துகூறியுள்ளார். ஆனால், பஞ்சு மட்டும் தனது கதையாசியர் மூளையை தட்டிவிட்டு புதிய கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தண்டனை தந்துள்ளது.

மணிரத்னத்தின் அடாவடி:

இதற்கிடையே ஜி.வியின் மரணத்தையொட்டி செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை நாயே பேயே என்று திட்டியுள்ளார் மணிரத்னம். சகோதரரின் மரணத்தால் மனம் நொந்து போயிருந்த மணி குறித்து தவறாக செய்தி போட வேண்டாம் என்பதால் அந்தத் திட்டுகளைஎல்லாம் நிருபர்கள் பொறுத்துக் கொண்டனர்.

இங்கிலீஷ், இந்தி பத்திரிக்கைளுக்கு மட்டுமே பேட்டி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள வழக்கமாகவே மணிரத்னத்துக்கு தமிழ்பத்திரிக்கையாளர்களைக் கண்டாலே பிடிக்காது. ஆனால், இவரது படத்தை மட்டும் தமிழர்கள் பார்க்க வேண்டும்.

ஜி.வி. கடும் கடன் தொல்லையில் சிக்கியபோது தனக்காக ஒரு படம் செய்து தருமாறு கெஞ்சியும் கூட மணி அவரைக்கண்டுகொள்ளவில்லை என்பது தனிக் கதை. தங்களை அவமானப்படுத்திய மணிக்கு சரியான நேரத்தில் பாடம் புகட்ட சமயம் பார்த்துக்கொண்டுள்ளனர் தமிழ் நிருபர்கள்.

போலீஸ் வேண்டுகோள்:

இதற்கிடையே ஜி.விக்கு கடன் கொடுத்தவர்கள் அதைப் பற்றிய விவரத்தை போலீசிடம் தெரிவிக்கலாம் என சென்னை மாநகரபோலீஸ் கமிஷ்னர் விஜய்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஜி.வியின் கடன்கள், அவருக்கு மிரட்டல் விடுத்தவர்கள்குறித்தும் தகவல் தரலாம். இதற்காக காவல்துறையில் 28260246, 26421162 ஆகிய தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு செய்யும் காவல்துறை மன்னாக்குடி கும்பலுக்கு நெருக்கமான அன்புச் செழியனை மட்டும் இதுவரை விசாரிக்காததுஏன் என்று தெரியவில்லை.

  • அன்புச்செழியனிடம் சிக்கிய தேவயானி
  • ஜி.வி. சாவுக்கு அன்புச்செழியன் காரணமல்ல- பஞ்சு
  • ஜி.வியை மிரட்டிய கந்து வட்டி ரெளடி மன்னார்குடி கும்பலிடம் தஞ்சம்
  • மதுரை கந்து வட்டிக் கும்பலின் மிரட்டல் காரணம்?
  • நெப்போலியனிடம் உதவி கேட்ட ஜி.வி.!
  • மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil