Just In
- 2 min ago
டெல்லியில் உள்ள தெருவுக்கு.. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்.. கவுன்சிலர் தகவல்!
- 8 min ago
லூசிஃபர் ரீமேக்.. நயன்தாரா நடிக்கிறாரா இல்லையா? என்ன சொல்கிறார் இயக்குனர் மோகன் ராஜா?
- 17 min ago
சொந்த காசுலேயே சூன்யம் வச்சுக்கிட்டீயே அச்சும்மா.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
- 33 min ago
கண்ணாடி போட்டுக்கிட்டு என்னம்மா இருக்காரு.. பிக் பாஸ் ஆரி அர்ஜுனனின் ஏலியன் பட டீசர் ரிலீஸ்!
Don't Miss!
- Automobiles
5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?
- News
சசிகலா உடன் சிறையில் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை- சிறை நிர்வாகம் தகவல்
- Sports
இதுதான் பிளான்.. ரொம்ப ஆசைப்படாதீங்க.. புட்டுபுட்டு வைத்த கம்பீர்.. அப்படியே செய்யும் சிஎஸ்கே!
- Finance
வாரத்தின் இறுதி நாளில் செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்?
- Lifestyle
ஆண்களே! உங்களோட 'இந்த' விஷயத்துக்கு கேரட் ரொம்ப நல்லதாம் தெரியுமா?
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'உங்களாலதான் எனக்கு எல்லா பிரச்சனையும் என்பார்' சித்ரா குறித்து கதறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!
சென்னை: நடிகை சித்ரா மரணமடைந்து ஒரு வாரம் கடந்த நிலையில் அவர் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன் முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.
மக்கள் டிவிவியில் விஜேவாக பணியை தொடங்கியவர் விஜே சித்ரா. அதனை தொடர்ந்து சன்டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பெரும்பாலான தொலைக்காட்சிகளில் விஜேவாக பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து சின்னப்பாப்பா பெரியபாப்பா , வேலு நாச்சியார் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் சித்ரா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான் அவருக்கு பெரும் பிரபலத்தை கொடுத்தது.
அந்த வார்த்தையை சொல்லாதீர்கள்.. எல்லாருக்கும் நடக்கும்.. சித்ரா மரணத்தால் கொந்தளிக்கும் பிரபல நடிகை!

தங்கள் வீட்டு மருமகளாக
முல்லை கேரக்டரில் அப்பாவி மருமகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். அந்த சீரியலில் நடிக்க தொடங்கியதில் இருந்து பலரும் தன்னை தங்களின் வீட்டு மருமகளாகவே பார்க்க தொடங்கிவிட்டதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார் சித்ரா.

கணவர் கைது
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி நடிகை சித்ரா நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கி தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரான ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புதிய பூதம்
இருந்த போதும் சித்ராவின் மரணம் தொடர்பாக நாள் தோறும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி பிரபலம் ஒருவரை நடிகை சித்ரா காதலித்ததாகவும் அவருடன் ரெசார்ட்டில் தனிமையில் இருந்ததாகவும் புதிய பூதம் ஒன்று கிளம்பியுள்ளது.

மிரட்டிய நடிகர்
தனிமையில் இருந்ததை அந்த பிரபல நடிகர் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு சித்ராவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தான் அழைக்கும் போதெல்லாம் வராவிட்டால் அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார் அந்த நடிகர்.

பயத்தில் இருந்த சித்ரா
திருமணத்திற்கு பிறகும் அவரது டார்ச்சர் தொடர்ந்ததாகவும் இதனால் எந்த நேரத்திலும் அந்த வீடியோக்களை தனது கணவரான ஹேமந்திடம் காட்டி விடுவார் என்ற பயத்திலேயே சித்ரா இருந்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

குமரன் கதறல் வீடியோ
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ராவுக்கு ஜோடியாக நடித்த நடிகர் குமரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சித்ரா குறித்த பல தகவல்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார் குமரன்.

திரும்பி வரப்போவதில்லை
அவர் பேசியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம், இப்போ சித்ரா எப்படி இறந்துபோனார் என்பதை பற்றி நான் பேச வரவில்லை. அதைப் பற்றி பேசுவதால் அவர் திரும்பி வர போவதில்லை. ஆனால் சித்ரா தன்னுடைய நல்ல நண்பர் ஒருவரிடம் தனது பர்சனல் விஷயங்களை ஷேர் செய்திருக்கலாம்.

பல வேலைகள் செய்வார்
அப்படி செய்திருந்தால் சித்ரா இப்போது நம்மோடு இருந்திப்பார் என கதறினார். சித்ரா ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வார். ஆனால் நான் அப்படி இல்லை. நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்காக அதிக நேரம் செலவிடுவேன்.

உங்களாலதான் எல்லா பிரச்சனையும்
இதனால் நான் கொடுக்கும் தேதிகளில் சித்ராவும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவருக்கு வேறு வேலை இருக்கும் போது நான் தேதி கொடுப்பதால் அவரும் வரவேண்டிய சூழல் ஏற்படும். இதனால் உங்களால் தான் எனக்கு எல்லாப் பிரச்சனையும், நீங்கபாட்டுக்கு தேதி கொடுத்துடுவீங்க.

வைராலகும் வீடியோ
எனக்கு அந்த நேரத்தில் வேறு நிகழ்ச்சிகள் வருகிறது என்று சொல்வார் என சித்ராவுடன் ஒன்றாக நடித்தது அவர் பேசியது உள்ளிட்ட தகவல்களை குமரன் கதறியப்படியே கூறியுள்ளார். நடிகர் குமரனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முத்தக்காட்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்த சித்ரா நடிகர் குமரனுக்கு ஜோடியாக இருந்தார். அந்த சீரியலில் எடுக்கப்பட்ட ஒரு முத்தக்காட்சிதான் அவரது கணவரான ஹேமந்த்துக்கு பிடிக்காமல் பெரும் பிரச்சனையானது என்றும் இதனால் சீரியலில் நடிக்கக்கூடாது என அவர் தடைவிதித்தாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.