»   »  மாதம் ஒரு படம்..மகிழ்ச்சியில் திளைக்கும் பாண்டிராஜ்

மாதம் ஒரு படம்..மகிழ்ச்சியில் திளைக்கும் பாண்டிராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் பாண்டிராஜின் அடுத்தடுத்த 3 படங்கள் டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியாகவிருக்கிறது. இதனால் தற்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் பாண்டிராஜ்.

Pandiraj Movies Release on Festivals

பசங்க,வம்சம், மெரினா என்று தரமான படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் பாண்டிராஜ். இவரின் இயக்கத்தில் சூர்யா, அமலாபால், பிந்து மாதவி ஆகியோர் நடித்த பசங்க 2 திரைப்படம் வரும் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகிறது.

அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் விஷால் நடிப்பில் இவர் இயக்கியிருக்கும் கதகளி திரைப்படம் வெளியாகிறது. தொடர்ந்து காதலர் தினத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த இது நம்ம ஆளு திரைப்படம் வெளியாகிறது.

இந்த 3 படங்களின் வெளியீட்டுத் தேதிகளையும் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாண்டிராஜ் அறிவித்திருக்கிறார். மேலே சொன்ன 3 படங்களில் 2 படங்களை( கதகளி, இது நம்ம ஆளு) ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

3 படங்கள் வரிசையாக வெளியாவதும் மூன்றுமே பண்டிகை தினங்களையொட்டி வெளியாவதும் இயக்குநர் பாண்டிராஜின் மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறதாம்.

நீங்க கலக்குங்க சார்!

English summary
Director Pandiraj 3 films Pasanga 2, Kathakali & Idhu Namma Aalu Release on Christmas ,Pongal & Valentines day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil