»   »  தமிழக காளைகளே, படமாகிறது 'மெரினா புரட்சி': ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

தமிழக காளைகளே, படமாகிறது 'மெரினா புரட்சி': ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக மெரினா கடற்கரையில் நடந்த இளைஞர் புரட்சி குறித்து படம் தயாரிக்கிறார் பாண்டிராஜ். மெரினா புரட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஆதரித்து இளைஞர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் அமைதி புரட்சி செய்தனர்.

அவர்களின் புரட்சியை பார்த்து நாட்டு மக்கள் அசந்து போனார்கள் என்றே கூற வேண்டும்.

மெரினா புரட்சி

மெரினா புரட்சி

மெரினாவில் நடந்த புரட்சியை மெரினா புரட்சி என்ற பெயரில் இயக்குகிறார் எம். எஸ். ராஜு. அந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் தனது பசங்க ப்ரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

சிவகார்த்திகேயன்

மெரினா புரட்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். ட்ரெய்லர் விரைவில் என்றும் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து

தமிழன்னா யாருன்னு இந்த உலகம் தெரிஞ்சுக்கிட்ட நாள் இன்னைக்கு!
10 கோடி தமிழர்களோட போராட்டத்தைப் படமா உருவாக்கியிருக்காங்க @pandiraj_dir அண்ணனோட @pasangaprodns .
வாழ்த்துக்கள் இயக்குனர் M.S.ராஜ் & dop @VelrajR sir 👍
#MarinaPuratchiFirstLook

தமிழர்

பண்பாட்டைக் காப்பாற்ற தமிழன் போர்
தொடங்கிய நாள் இன்று !
கலாச்சாரத்தைக் காக்க 10 கோடி தமிழர்கள் கண்ணியமுடன் நடத்திய போராட்டம் விரைவில் ...
உங்கள் பார்வைக்கு !
முதல் பார்வை இன்று முதல்..
Engal vaazhkkaiyai maatriyadhum #Marina dhan. Best wishes @pandiraj_dir sir & @pasangaprodns

English summary
Pandiraj is producing a film on Jallikkattu protests held at Marina beach last year. The movie is titled Marina Puratchi. Sivakarthikeyan has released the first look poster.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X